JoomlaLock.com All4Share.net

Background Video

புதன்கிழமை, 05 ஜூலை 2017 00:00

திருவனந்தபுரம் : கை மாறுகிறது அனந்த பதம்நாப சுவாமி கோயில் நிர்வாகம் Featured

Written by 
Rate this item
(0 votes)

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற பத்மநாபசாமி கோவில் நிர்வாகம், திருவிதாங்கூர் அரசு குடும்பத்தினரிடம் இருந்து கைமாறும் நிலை உருவாகி உள்ளது. இந்த கோவிலை நிர்வாகிக்க, தனியாக ஒரு அதிகாரியை நியமிக்கும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோவில், உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில், ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், ஆபரணங்கள் உள்ளன. இந்த கோவிலின் நிர்வாகத்தை திருவிதாங்கூர் அரசு குடும்பத்தினர் ஏற்படுத்திய அறக்கட்டளை தான் இதுநாள் வரை கவனித்து வருகிறது.

இந்த கோவிலில் பல முறைகேடுகள் நடந்து வருகின்றன என்ற புகாருடன் தொடரப்பட்டுள்ள வழக்கை, சுப்ரீம் கோர்ட் விசாரித்து வருகிறது. கோவிலை பாதுகாக்கும் பணியில் ஒரு எஸ்.பி., தலைமையில், 200 போலீசார் ஈடுபட்டுள்ளனர். கோவிலை கண்காணிக்க சுப்ரீம் கோர்ட் ஒரு குழுவையும் ஏற்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ஜெ.எஸ்.கேஹர் மற்றும் டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் பிறப்பித்த பல்வேறு உத்தரவுகள் வருமாறு: கோவிலின் அன்றாட பணிகளை நிர்வாகிக்க தனியாக ஒரு செயல் அதிகாரியை கேரள அரசு நியமிக்க வேண்டும்.

திருவனந்தபுரம் கலெக்டர் தலைமையிலான குழுவுக்கு கட்டுப்பட்டு அந்த செயல் அதிகாரி செயல்பட வேண்டும். கோவிலில் அவ்வப்போது நடந்து வரும் திருட்டு சம்பவங்கள் மற்றும் கோவிலுக்குள் உள்ள ஏராளமான நகைகள் காரணமாக, போதிய பாதுகாப்பு போட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

எனவே, கேரள அரசு பல் வேறு அதிகாரிகள் பெயர்கள் அடங்கிய பட்டியலை சமர்பிக்க வேண்டும். அதில் இருந்து ஒருவரை பாதுகாப்பு அதிகாரியாக கோர்ட் நியமிக்கும்.

கோவிலின் வரவு செலவு கணக்குகளை சரிபார்க்க, இந்திய தணிக்க மற்றும கணக்கு சேவை பிரிவை சேர்ந்த மூன்று அதிகாரிகள் அடங்கிய குழுவை கேரள அரசு ஏற்படுத்த வேண்டும்.

இவர்கள் கோவில் நிர்வாகத்திற்குள் வராமல் வெளியில் இருந்து செயல்படும் வகையில் இருக்க வேண்டும். வெளியில் இருந்து தணிக்கை செய்தால் தான் அனைத்தும் முறையாக இருக்கும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். சுப்ரீம் கோர்ட் இந்த உத்தரவால், கோவில் நிர்வாகம் அரசு குடும்பத்தினரிடம் இருந்து கைமாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

 

Read 169 times

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…