JoomlaLock.com All4Share.net

Background Video

வியாழக்கிழமை, 27 ஜூலை 2017 00:00

திருவில்லிப்புத்தூர் : இன்று திருவாடிப்பூர தேரோட்டம் Featured

Written by 
Rate this item
(0 votes)

ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத்தேரோட்டம் இன்று காலை நடக்கிறது.  ஜூலை 19 ல் கொடியேற்றத்துடன் துவங்கிய ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத்திருவிழாவை தொடர்ந்து, ஐந்து கருடசேவை, சயனத்திருக்கோலம் முடிந்த நிலையில், ஆடிப்பூரத் தேரோட்டம் இன்று நடக்கிறது . Image result for srivilliputhur temple car festival images photos

இன்று அதிகாலையில் ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு திருமஞ்சனம் நடக்கிறது.தொடர்ந்து திருத்தேரில் ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளுகின்றனர். சிறப்பு பூஜைகள் முடிந்த பின் தேரினை காலை 8:05 மணிக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தேரின் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைக்கிறார். 

தேர் நிலைக்கு வந்ததும் தேரில் வீற்றிருக்கும் ஆண்டாள், ரெங்கமன்னாரை மாலை 5 :00 மணி வரை பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். பின்னர் ஆண்டாள், ரெங்கமன்னார் மண்டபம் எழுந்தருள்வார்கள்.

தேரோட்டத்தை யொட்டி இன்று மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் ராமராஜா மற்றும் அறநிலையத்துறையினர் செய்துள்ளனர்.

தேரோட்டத்தை முன்னிட்டு, நேற்று காலை 11:00 மணிக்கு ஸ்ரீரங்கம் பெருமாள் கோயில் இணை ஆணையர் ஜெயராமன் தலைமையில் ஆண்டாளுக்கு வஸ்திரம், புடவை, பழம், மங்கலப் பொருட்களை கொண்டு வந்தனர்.

மதியம் 12:00 மணிக்கு அழகர்கோவில் கள்ளழகர் கோயில் உதவி ஆணையர் மாரிமுத்து, சுந்தரராஜன் பட்டர் தலைமையில் அழகர் பரிவட்டம், மங்கலப் பொருட்களை கொண்டு வந்தனர். அவை ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சமர்பிக்கப்பட்டன. இந்த கோயில்களில் இருந்து வந்த மங்கலப் பொருட்கள் இன்று நடக்கும் தேரோட்டத்தின் போது ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சாற்றப்படும்.

Read 302 times

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…