காவிரி மகா புஷ்கர விழா கொண்டாடுவதற்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
காவிரி மகா புஷ்கர விழா செப்டம்பர் 12 ஆம் தேதியிருந்து 24ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இந்த விழா 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் வைணவ விழா ஆகும்.
இந்த விழாவை முன்னிட்டு பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடுவர். அதில் பல்லாயிரகணக்கான பொதுமக்கள் கலந்துகொள்வர். திருச்சி அம்மா மண்டபத்தில் இந்த விழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும்.
இந்த விழாவை முன்னிட்டு மேட்டூர் அணையில் இருந்து 10,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அதனால், கரையோரம் வாழும் மக்கள் மேடான பகுதிகளுக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.