JoomlaLock.com All4Share.net

Background Video

வெள்ளிக்கிழமை, 29 டிசம்பர் 2017 00:00

தமிழகம் முழுதும் வைணவ கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு Featured

Written by 
Rate this item
(0 votes)
தமிழகத்தில் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் சிறப்புடன் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 19-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
 
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள வைணவ திருக்கோவில்களில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
 
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, திருச்சி ஸ்ரீரங்கம் ஆகிய திருக்கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
 
இதேபோன்று மதுரையில் அழகர்கோவில், சுந்தர்ராஜபெருமாள் கோவில்களிலும், திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில், திருவள்ளூர்-காக்களூரில் உள்ள ஜலநாராயணன் கோவில்களிலும் சொர்க்கவாசல் திற;ககப்பட்டது.
 
ஆந்திராவில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
 
காஞ்சீபுரம் மாவட்டத்தில் வைகுண்ட பெருமாள், அஷ்டபுஜ பெருமாள், தலசயன பெருமாள் கோவில்களிலும், நாமக்கல், நாகை, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள வைணவ திருக்கோவில்களிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
 
இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Read 154 times

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…