JoomlaLock.com All4Share.net

Background Video

திங்கட்கிழமை, 07 ஆகஸ்ட் 2017 00:00

நிறைவடைந்தது அமர்நாத் புனித யாத்திரை

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். இந்த ஆண்டு தரிசனத்தையொட்டி யாத்ரீகர்களின் முதல் குழுவினர் கடந்த ஜூன் மாதம் 28-ம் தேதி பயணத்தை தொடங்கினர். முதல் நாளாக 2,280 யாத்ரீகர்கள் மலையடிவாரத்தில் இருந்து அமர்நாத் ஆலயத்துக்கு புறப்பட்டு சென்றனர்.
 
40 நாட்கள் யாத்திரை இன்றுடன் முடிவுக்கு வந்தது. இதுவரை சுமார் 2.60 லட்சம் யாத்ரீகர்கள் பனிலிங்கத்தை தரிசித்துள்ளனர். பயங்கரவாதிகள் தாக்குதல், விபத்து மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இதுவரை 40-க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
கடந்த 14 ஆண்டுகளில் இரண்டாவது குறைந்த எண்ணிக்கையில் அமர்நாத் பனியாத்திரைக்கு யாத்ரீகர்கள் சென்றுள்ளனர். கடந்த ஆண்டு அமர்நாத் யாத்திரைக்கு மிகக்குறைந்த அளவில் 2.20 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டனர். 
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…