JoomlaLock.com All4Share.net

Background Video

தமிழகத்தைப் பொறுத்தவரை, பழைமையான எல்லா ஊர்களுமே பொதுவாக மரங்களை அடிப்படையாகக் கொண்டே அழைக்கப்பட்டு வந்துள்ளன. ஓர் ஊரில் எந்த மரங்கள் அதிகமாக வளர்ந்ததோ அந்த மரத்தின் அல்லது வனத்தின் அடிப்படையிலேயே ஊரின் பெயரும் வழங்கப்படும்.

கடம்பவனம், திருவேற்காடு, திருவாலங்காடு, தர்ப்பாரண்யம் என்று இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இயற்கையோடு இணைந்த வாழ்வையே நம் முன்னோர்கள் விரும்பியிருக்கிறார்கள் என்பதை இதிலிருந்தே நாம் புரிந்துகொள்ளலாம். அந்த அடிப்படையில்தான் தமிழகத்தில் இருக்கும் பழைமையான ஆலயங்களுக்கும் தலவிருட்சம் என்ற ஒன்றை ஏற்படுத்தியிருக்கின்றனர்.

ஓர் ஆலயத்தின் சிறப்புகளைக் கூறும்போது, மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம் என்று கூறுவார்கள். கோயிலில் முக்கிய அம்சமாகத் திகழும் விருட்சம், அந்தக் கோயிலில் அருளும் இறைவனின் அம்சமாகவே போற்றப்படுகிறது. 

சமீப காலமாக திருக்கோயில்களில் விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகிறது. காளையார்கோயில் தீ விபத்து, காளஹஸ்தி கோயில் தீ விபத்து, திருச்செந்தூர் மண்டம் இடிந்தது, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மண்டபத்தில் தீ விபத்து போன்ற விபத்துகளைத் தொடர்ந்து, நேற்று இரவு திருவள்ளூர் - அரக்கோணம் சாலையில் அமைந்திருக்கும் திருவாலங்காடு அருள்மிகு வடாரண்யேஸ்வரர் கோயிலின் தல விருட்சமான ஆலமரம் நேற்று தீயில் எரிந்தது பக்தர்களை பெருத்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…