திங்கட்கிழமை, 05 பிப்ரவரி 2018 00:00
மயிலாடுதுறையில் விநோதம் : அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் - 2 குருக்கள் நீக்கம்
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள மாயூரநாதர் கோவிலில் அபயாம்பிகை அம்மன் சன்னதி உள்ளது.
இந்த அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் செய்த குருக்கள் ராஜ், கல்யாணம் ஆகியோர் குறித்து சமூக வலை தளங்களில் கடும் கண்டனம் எழுந்தது. இதையடுத்து கோவிலை நிர்வகித்து வரும் திருவாவடுதுறை ஆதீனம், இரண்டு குருக்களையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆகம விதிகளை மீறி இருவரும் செயல்பட்டு உள்ளதாக ஆதீனம் குற்றம் சாட்டியுள்ளது.
Published in
ஆன்மிகம்