ஞாயிற்றுக்கிழமை, 05 ஆகஸ்ட் 2018 00:00
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கொடியேற்றம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர உற்சவம் இன்று காலைகொடியேற்றத்துடன் துவங்கியது.
கோயில் மாட வீதிகள் , ரத வீதிகள் சுற்றி பாலாஜி பட்டர் தலைமையில் கொடி பட்டம் சுற்றிகோயிலுக்கு வந்தது. பின்னர் கொடிமரம் முன் சிறப்பு பூஜைகள் செய்யபட்டு, காலை 10:08 மணிக்கு கொடியேற்றபட்டது.
விழாவில் மணவாள மாமுனி ஜீயர், எம்எல்ஏ சந்திரபிரபா, தக்கார் ரவிசந்திரன் - செயல் அலுவலர்ராமராஜா மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
இதனை தொடர்ந்து தினமும் ஆண்டாள் ரெங்கமன்னார் மண்டபம் எழுந்தருளலும், இரவு வீதியுலாவும் நடக்கிறது. ஆகஸ்ட் 9 அன்று காலை 10 மணிக்கு பெரியாழ்வார் மங்கள சாசனமும், இரவு 10 மணிக்கு ஐந்து கருட சேவையும்.ஆகஸ்ட் 11ல் இரவு 7 மணிக்கு சயன சேவையும், ஆகஸ்ட் 13 காலை 7.20 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது.
Published in
ஆன்மிகம்