JoomlaLock.com All4Share.net

Background Video

வைணவ சமயப் பெரியவர்களில் ஒருவரான சுவாமி ஸ்ரீ வேதாந்த தேசிகரின் 750 -ஆவது ஆண்டு பிறந்த தின விழா சென்னையை அடுத்த திருவள்ளூரில் உள்ள அஹோபில மடத்தில் திங்கள்கிழமை தொடங்கி 3 நாள் நடைபெறுகிறது.

கி.பி.1,268 -ஆம் ஆண்டு பிறந்த வேதாந்த தேசிகர், ராமானுஜரின் "விசிஷ்டாத்வைத' சித்தாந்தத்தை பின்பற்றிய மகான். தத்துவ வித்தகர், கவிஞர், பல நூல்களைக் கண்ட பெருமகனார். நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை தமிழ், சமஸ்கிருதம், பிராகிருதம், மணிப்பிரவாள நடையில் எழுதியவர். அவற்றில் குறிப்பிட்டத்தக்கவையாக ஸ்ரீஸ்தோத்ர நிதி, ஸ்ரீபாதுகா சஹஸ்ரம், ரகஸிய க்ரந்தம், ஸ்ரீதேசிகா பிரபந்தம் உள்ளிட்டவை அடங்கும். 

புரட்டாசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் காஞ்சிபுரத்தில் தூப்புல் (பொய்கையாழ்வார் பிறந்த விளக்கொளி பெருமாள் கோயில் பகுதி) எனும் இடத்தில் திருமலை வேங்கடவன் கோயில் மணியின் அம்சமாக பிறந்தவர். பெற்றோர் இட்ட பெயர் வேங்கடநாதன். பின்னாளில் இவர் 'சுவாமி தேசிகன்', 'தூப்புல் நிகமாந்த தேசிகன்', 'தூப்புல் பிள்ளை', உபயவேதாந்தாச்சாரியர்', "சர்வ தந்திர சுதந்திரர்' மற்றும் "வேதாந்த தேசிகன்' என்னும் பெயர்களால் அழைக்கப் பெற்று புராணங்களையும், சாத்திரங்களையும் குறையறக் கற்றவர்.

அத்தகைய சிறப்பு மிக்க வைணவப் பெரியவரின் 750 -ஆவது பிறந்த நாள் விழாக் கொண்டாட்டம் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்களால் வரும் செப்டம்பர் மாதம் வரை கொண்டாடப்படவுள்ளது.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…