JoomlaLock.com All4Share.net

Background Video

விளையாட்டு

உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் ஜூன் 14-ம் தேதி ரஷ்யாவில் தொடக்கம் ,

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் ஜூன் 14-ம் தேதி முதல் ஜூலை 15-ம் தேதி வரை ரஷ்யாவில் நடைபெறுகிறது. 12 ஆண்டுகளுக்கு பிறகு ஐரோப்பிய கண்டத்தில் உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது. Image result for world cup in russia images photos

கடைசியாக 2006-ம் ஆண்டு ஜெர்மனி நாடு உலகக் கோப்பையை சிறப்பாக நடத்தியிருந்தது. தற்போது முதன்முறையாக கிழக்கு ஐரோப்பியாவில் அமைக்கப்பட்டுள்ள மைதானங்களில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. அணிகளின் பயண நேரத்தை சமாளிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

உலகக் கோப்பை திருவிழாவை ரஷ்யா நடத்துவதுவே இதுவே முதன்முறை. போட்டியை நடத்தும் உரிமை பெற்ற நாடு என்பதால் ரஷ்யா நேரடியாக உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. மற்ற 31 அணிகளும் தகுதி சுற்றின் வாயிலாகவே தேர்வாகி உள்ளன.

இந்த 32 அணிகளில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி உள்ளிட்ட 20 அணிகள் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை மற்றும் அதற்கு முந்தைய தொடர்களிலும் களமிறங்கி உள்ளன. ஐஸ்லாந்து மற்றும் பனாமா அணிகள் முதன்முறையாக விளையாட தகுதி பெற்றுள்ளன. இந்த உலகக் கோப்பை திருவிழாவில் மொத்தம் 64 ஆட்டங்கள் 11 நகரங்களில் உள்ள 12 மைதானங்களில் நடத்தப்பட உள்ளது.

இறுதிப் போட்டி ஜூலை 15-ம் தேதி மாஸ்கோவில் உள்ள லூஸ்னிக்கி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் இந்த மைதானம்தான் மிகப்பெரியது. இங்கு 81 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம். உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணியானது 2021-ம் ஆண்டு நடைபெறும் ஃபிபா கான்ஃபெடரேஷன் கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறும்.

Read 63 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…