JoomlaLock.com All4Share.net

Background Video

விளையாட்டு

உலகக்கோப்பை கால்பந்து ஃ பைனல்  : குரேஷியாவிற்கு ' பெப்பே' காட்டியது ஃ பிரான்ஸ்

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 14-ந்தேதி ரஷியாவில் தொடங்கியது. 32 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் ஐரோப்பிய அணிகளான பிரான்சும், குரோஷியாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இந்நிலையில் உலக கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் இன்று மாஸ்கோ நகரில் அமைந்துள்ள லுஸ்னிகி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களின் ஆவலை தூண்டி இருப்பதால் இந்த ஆட்டம் மாபெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது. 

1998-ம் ஆண்டு சாம்பியனான பிரான்ஸ் அணி 2-வது முறையாக வாகை சூடும் முனைப்பில் களமிறங்கியது. தோல்வியே சந்திக்காத அந்த அணி அரைஇறுதியில் பெல்ஜியத்தை 1-0 என்ற கோல் கணக்கில் விரட்டியது. இந்த உலக கோப்பையில் குரோஷிய அணி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. லீக் சுற்றில் அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி அளித்தும், அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்தை போட்டுத்தாக்கியதும் குரோஷியா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில் இன்று தொடங்கிய இறுதிஆட்டத்தின் துவக்கம் முதலே பதற்றம் தொற்றிக் கொண்டது. இதில் ஆட்டம் தொடங்கிய 18 வது நிமிடத்திலே குரோஷியா அணி வீரர் மரியோ மான்ட்ஜூகிச் அடித்த சுய கோலால் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் குரோஷியா வீரர் இவான் பெரிசிச் 1 கோல் அடித்து அசத்தினார். இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது. 

இதனைத்தொடர்ந்து பிரான்ஸ் வீரர் கிரிஸ்மான் 1 கோல் அடித்தார். இதன்மூலம் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதனால் ஆட்டம் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. இதன்மூலம் முதல்பாதி ஆட்ட நேர முடிவில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.

பரபரப்புடன் தொடங்கிய இரண்டாவது பாதி ஆட்டத்தின் 59வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் பால் போக்பா 1 கோல் அடிக்க அரங்கமே அதிர்ந்தது. அவரைத் தொடர்ந்து சக அணியின் வீரர் கைலியன் பாப்பே மேலும் 1 கோல் அடிக்க அரங்கத்தில் சத்தம் விண்ணை பிளந்தது. பிரான்ஸ் அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றனர். இந்நிலையில் குரோஷியா அணியின் வீரர் மான்ட்ஜூகிச் 1 கோல் அடித்து அணிக்கு நம்பிக்கை ஏற்படுத்தினார். ஆனால் இறுதிவரை குரோஷியா அணியினரால் மேலும் கோல் அடிக்க முடியவில்லை. இதன்மூலம் குரோஷியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி “சாம்பியன்” பட்டம் வென்றது. இதனை பிரான்ஸ் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இதன்மூலம் சாம்பியன் பட்டத்தை வென்ற பிரான்ஸ் அணிக்கு ரூ.255 கோடியும், 2-வது இடத்தை பிடித்த குரோஷியா அணிக்கு ரூ.188 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளது.

Read 33 times Last modified on ஞாயிற்றுக்கிழமை, 15 ஜூலை 2018 23:19
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…