JoomlaLock.com All4Share.net

Background Video

விளையாட்டு

டி - 20  தொடரிலிருந்து  டோனி அதிரடி நீக்கம்

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி 20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் இருந்து மகேந்திர சிங் தோனி நீக்கப்பட்டுள்ளது பெரும் பாலானோருக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தோனியின் நீக்கம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. 

தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத்தை அனைவரும் வசைபாடி வருகின்றனர். இந் நிலையில் டி 20 தொடர்களில் இருந்து தோனி நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அணித் தேர்வின் போது கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் முழு சம்மதம் தெரிவித்த பின்னரே தோனியின் நீக்கம் நிகழ்ந்துள்ளது.

குறுகிய வடிவிலான ஆட் டத்தில் தோனியின் நீக்கம் அவரது ரசிகர்களை கவலையடைச் செய்துள்ள போதிலும், தேர்வுக் குழுவினர் இந்த துணிச்சலான முடிவை 2020-ம் ஆண்டு ஆஸ்தி ரேலியாவில் நடைபெறும் டி 20 உலகக் கோப்பை தொடரை கருத்தில் கொண்டே எடுத்துள் ளதாக சில முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் விமர்சகர்களும் கருது கின்றனர்.

பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘‘இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் முடிவடைந்ததும் தோனி, தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து முக்கிய முடிவை எடுக்கக்கூடும். இதனால் 2020-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி 20 உலகக் கோப்பை தொடரில் தோனி பங்கேற்க வாய்ப்பில்லை. எனவே டி 20 ஆட்டத்துக்கான அணியில் தனது இடத்தை தோனி தக்கவைத்துக் கொள்வதில் எந்தவித அர்த்தமும் இல்லை.

தேர்வுக்குழுவினரும், இந்திய அணி நிர்வாகமும் இந்த விஷ யத்தில் நல்ல கருத்துகளை கொண் டிருந்தனர். அணித் தேர்வின் போது விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் உடனிருந்தனர். அவர்களது அனுமதி இல்லா மலா, தோனி விஷயத்தில் தேர்வுக் குழுவினர் இதுபோன்ற ஒரு முடிவை எடுத்திருக்க முடியும்” என்றார்.

37 வயதான தோனி, 93 டி 20 ஆட்டங்களில் பங்கேற்று 1,487 ரன்கள் சேர்த்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 127.09 ஆகும். சர்வதேச டி 20 போட்டிகளில் தோனி இனிமேல் அணிக்கு திரும்பு வாரா என்பது சற்று சந்தேகம் தான். ஏனெனில் இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி 20 தொடரை தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 தொடரில் பங்கேற்கிறது.

அதன் பின்னர் பிப்ரவரி மாதமே நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி 20 தொடரில் விளையாடுகிறது. எதிர்கால திட்டத்தைத் கருத்தில் கொண்டு இந்த இரு தொடர்களிலும் அடுத்த விக்கெட் கீப்பரை நிலைப்படுத்திக் கொள்ளும் முயற்சிகளில் தேர்வுக்குழுவினர் கவனம் செலுத்தக்கூடும்.

தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறுகையில், “தோனி 6 டி 20 போட்டிகளுக்கு இல்லை. நாங்கள் 2-வது விக் கெட் கீப்பர் இடத்துக்காக இந்த முடிவை எடுத்துள்ளோம். டி 2-ல் தோனியின் வாழ்வு முடிந்து விட்டது என்று அர்த்தமல்ல” என்றார்.

தற்போதைக்கு தோனிக்கு மாற்றாக ரிஷப் பந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மற்றொரு விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக்கும் அணியில் உள்ளார். அணியில் தங்களது இடத்தை தக்கவைத்துக் கொள்வதில் இவர் களுக்குள் கடும் போட்டி நிலவக் கூடும். எனினும் ரிஷப் பந்த் தனது அதிரடி ஆட்டத்தால் தேர்வுக் குழுவினர் நம்பிக்கையை காப் பாற்றுவதில் கவனம் செலுத்தக் கூடும்.

ஒருவேளை ரிஷப் பந்தும், தினேஷ் கார்த்திக்கும் எதிர் பார்ப்பை நிறைவேற்ற தவறினால் மட்டுமே தோனியை மீண்டும் அணிக்குள் கொண்டுவருவது குறித்து தேர்வுக்குழுவினர் ஆலோ சிக்கும் நிலைக்கு தள்ளப் படக்கூடும்.தற்போதைக்கு தோனிக்கு மாற்றாக ரிஷப் பந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மற்றொரு விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக்கும் அணியில் உள்ளார். அணியில் தங்களது இடத்தை தக்கவைத்துக் கொள்வதில் இவர்களுக்குள் கடும் போட்டி நிலவக்கூடும்.

Read 53 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…