JoomlaLock.com All4Share.net

Background Video

விளையாட்டு

ஐபிஎல் : மீண்டும் சென்னையிடம் தோற்றது கொல்கொத்தா
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 29வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது.
 
டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, கொல்கத்தா அணி முதலில் களமிறங்கியது.
 
சுனில் நரேன் 2 ரன்னிலும், நிதிஷ் ரானா 21 ரன்னிலும், ராபின் உத்தப்பா ரன் எதுவும் எடுக்காமலும், தினேஷ் கார்த்திக் 18 ரன்னிலும், ஆண்ட்ரு ரசல் 10 ரன்னிலும் வெளியேறினர்.
 
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்த கிறிஸ் லின் 51 பந்தில் 6 சிக்சர், 7 பவுண்டரியுடன் 82 ரன்னில் அவுட்டானார். இறுதியில், கொல்கத்தா அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 161 ரன்களை எடுத்தது.
 
சென்னை அணி சார்பில் இம்ரான் தாஹிர் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 
 
இதையடுத்து 162 ரன்களை இலக்காக கொண்டு சென்னை அணி களமிறங்கியது. வாட்சன் 6 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.
 
டு பிளசிஸ் 24 ரன்னிலும், அம்பதி ராயுடு 5 ரன்னிலும், கேதார் ஜாதவ் 20 ரன்னிலும், டோனி 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
 
சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் சுரேஷ் ரெய்னா அபாரமாக ஆடி அரை சதமடித்தார்.
 
இறுதியில் சென்னை அணி 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுரேஷ் ரெய்னா 58 ரன்னுடனும், ஜடேஜா 31 ரன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.
Read 25 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…