JoomlaLock.com All4Share.net

Background Video

விளையாட்டு

ஐபிஎல் : டெல்லிக்கு ஹாட்ரிக் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 30வது லீக் ஆட்டம் ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து, டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் இறங்கினர். கடந்த போட்டியில் சிறப்பாக ஆடிய தவான் இந்த முறை 7 ரன்னிலும், பிரித்வி ஷா 4 ரன்னிலும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். அடுத்து இறங்கிய காலின் முன்ரோ அதிரடியாக ஆடி 24 பந்தில் 3 சிக்சர், 4 பவுண்டரியுடன் 40 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து இறங்கிய கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் நிதானமாகவும் பொறுப்புடனும் ஆடினார்.  அவர் 45 ரன்னில் வெளியேறினார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த ரிஷப் பன்ட் 23 ரன்னில் அவுட்டானார். இறுதியில், டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்களை எடுத்துள்ளது. ஐதராபாத் அணி வெற்றிபெற 156 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஐதராபாத் அணி சார்பில் கலீல் அகமது 3 விக்கெட்டும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டும், அபிஷேக் சர்மா, ரஷித் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 
 
இதனையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களம் இறங்கியது.  தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஜானி களம் இறங்கினர்.  ஆட்டத்தின் 9 ஓவர் வரை களத்தில் நின்று இருவரும் ரன்களை குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.  ஆட்டத்தின் 9.5 வது ஓவரில் கீமோ பால் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து ஜானி 41 (31) ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்ததாக வந்த வில்லியம்சன் 3 (8), ரிக்கி 7 (12) வந்த வேகத்தில் கீமோ பால் வீசிய பந்தில் அவுட்டானார்.  

 

இதனிடையே ஆட்டத்தின் 16.2 வது ஓவரில் டேவிட் வார்னர் 47 பந்துகளை சந்தித்து 51 ரன்கள் எடுத்து ரபேடா வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.  ஆட்டத்தின் 16.2 ஓவரில் ஐதராபாத் அணி 106 ரன்கள் எடுத்து 4 விக்கெட்களை இழந்திருந்தது.  அடுத்ததாக வந்து களம் இறங்கிய விஜய் சங்கர் 1 (2), ஹோடா 3 (4), ரஷித் கான் 0 (1), அபிசேக் சர்மா 2 (3)  புவனேஷ்வர் குமார் 2 (4), அஹமத் 0 (1)  என ரன்கள் எடுத்து வந்த வேகத்தில் அவுட்டாகி வெளியேறினர்.   ஆட்டத்தின் 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 116 ரன்கள் மட்டுமே எடுத்தது ஐதராபாத் அணி.  இதன் மூலம் 39 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி  எளிதான வெற்றியை பெற்றது. 

டெல்லி அணி தரப்பில் ரபேடா 4 விக்கெட், கிறிஸ் மோரிஸ், கீமோ பால் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

Read 63 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…