JoomlaLock.com All4Share.net

Background Video

விளையாட்டு

உலக கோப்பை கூடைப்பந்து போட்டி : ஸ்பெயின் அணி உலக சாம்பியன்

18-வது உலக கோப்பை கூடைப்பந்து திருவிழா சீனாவில் கடந்த 16 நாட்களாக நடந்து வந்தது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் 5 முறை சாம்பியனான அமெரிக்கா கால்இறுதியுடன் வெளியேறியதுடன் 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. 69 ஆண்டுகால உலக கோப்பை கூடைப்பந்து வரலாற்றில் அமெரிக்காவின் மோசமான செயல்பாடாக இது அமைந்தது.

மகுடத்துக்கான இறுதிப்போட்டியில் ஸ்பெயின்-அர்ஜென்டினா அணிகள் நேற்று மல்லுகட்டின. தொடக்கத்திலேயே 11-2 என்ற கணக்கில் புள்ளிகளை திரட்டிய ஸ்பெயின் தனது ஆதிக்கத்தை தளரவிடாமல் நிலைநாட்டியது. முதல் பாதியில் 43-31 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்ற ஸ்பெயின் கடைசி வரை அந்த முன்னிலையை தக்க வைத்துக் கொண்டது.

முடிவில் ஸ்பெயின் அணி 95-75 என்ற புள்ளி கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி 2-வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை உச்சிமுகர்ந்தது. இதற்கு முன்பு 2006-ம் ஆண்டில் அந்த அணி பட்டம் வென்று இருந்தது. ஸ்பெயின் அணியில் அதிகபட்சமாக ரிக்கி ருபியோ 20 புள்ளிகள் சேர்த்தார்.

முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 67-59 என்ற புள்ளி கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.இந்த உலக கோப்பை போட்டியில் டாப்-2 இடங்களை பிடித்த ஸ்பெயின், அர்ஜென்டினா உள்பட 8 அணிகள் அடுத்த ஆண்டு நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றன.

அடுத்த உலக கோப்பை கூடைப்பந்து போட்டியை 2023-ம் ஆண்டு பிலிப்பைன்ஸ், ஜப்பான், இந்தோனே‌ஷியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.

Read 46 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…