JoomlaLock.com All4Share.net

Background Video

விளையாட்டு

ஐ.பி.எல் 2017 : கடைசி ஓவரில் மும்பையை வீழ்த்தியது புனே

ஐபிஎல் கிரிக்கெட் 10 வது தொடரில் இன்று நடைபெறவுள்ள 2வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, ரைஸிங் புனே சூப்பர்ஜெயண்ட் அணி பலப்பரீட்சை நடத்துகிறது.

புனேவில் நடைபெறும் இந்த போட்டியில் டாசில் வென்ற புனே அணி கேப்டன் ஸ்மித் பீல்டிங் தேர்வு செய்தார். இதைத்தொடர்ந்து மும்பை அணிக்கு பார்த்திவ் பட்டேல் மற்றும் ஜோஸ் பட்லர் துவக்கம் தந்தனர்.

தொடக்கம் முதலே அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர். 19 ரன்கள் எடுத்தபோது பார்த்திவ் பட்டேல் இம்ரான் தாகீர் பந்துவீச்சில் போல்ட் முறையில் அவுட் ஆகி நடையை கட்டினார். இதன் பின்னர் 3-வது வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா 3 ரன்னில் ஏமாற்றம் தந்தார். அதிரடியாக ஆடிய பட்லர் 19 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து இம்ரான் தாகீர் பந்துவீச்சில் அவுட் ஆகினார்.

அடுத்து களமிறங்கிய நிதிஷ் ராணா 28 பந்தில் 34 ரன்களிலும், அம்பாதி ராயுடு 10 ரன்களிலும் வெளியேறினேர். இதையடுத்து ரன்வேகம் கணிசமாக குறைய கடைசி நேரத்தில் களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக 4 சிக்சர், 1 பவுண்டரி என 30 ரன்கள் விளாசி அவுட் ஆனார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட்டை இழந்து 184 ரன்கள் குவித்தது. இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய புனே அணி 19.5 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. கடைசி  ஓவரில் 13 ரன்கள் தேவையான நிலையில் ஸ்மித் 4,5 போலார்ட் வீசிய பந்துகளில் சிக்சர் அடித்து ஒரு பந்து வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தினார்.

புனே அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்மித் 54 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார். ரகானே 34 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார். இதன்மூலம் புனே அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. ஆட்ட நாயகனாக ஸ்மித் அறிவிக்கப்பட்டார்.


 

Read 140 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…