JoomlaLock.com All4Share.net

Background Video

விளையாட்டு

ரோஹிட் மீண்டும் அதிரடி : 35 பந்துகளில் சதம் - தொடரை வென்றது இந்தியா

இலங்கைக்கு எதிரான இரண்டாவது 'டுவென்டி-20' போட்டியில் கேப்டன் ரோகித் 35 பந்தில் சதம் விளாசி சாதிக்க, இந்திய அணி 88 ரன் வித்தியாசத்தில் வென்று தொடரையும் கைப்பற்றியது. 

இந்தியா வந்துள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. இரண்டாவது போட்டி இந்துாரில் (ம.பி.,) நடந்தது. இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இலங்கை அணியில் விஷ்வ பெர்ணான்டோ, ஷனாகா நீக்கப்பட்டு சதீரா சமரவிக்ரமா, சதுரங்கா டி சில்வா சேர்க்கப்பட்டனர். 'டாஸ்' வென்ற இலங்கை அணி கேப்டன் திசாரா பெரேரா, 'பீல்டிங்' தேர்வு செய்தார். 

இந்திய அணிக்கு கேப்டன் ரோகித், லோகேஷ் ராகுல் ஜோடி அபார துவக்கம் அளித்தது. பிரதீப் பந்துவீச்சில் ராகுல் தொடர்ந்து ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்தார். இலங்கை பந்துவீச்சை துவம்சம் செய்த ரோகித் 35வது பந்தில் சதம் எட்டினார். இதன் மூலம், சர்வதேச 'டுவென்டி-20' போட்டியில் அதிவேக சதம் கடந்த வீரர் என்ற சாதனையை தென் ஆப்ரிக்காவின் மில்லருடன் பகிர்ந்து கொண்டார்.

ரோகித் 118 ரன்களில் ஆட்டமிழந்தார். ராகுல் (89) அரை சதம் கடந்தார். பாண்ட்யா (10) நிலைக்கவில்லை. திசரா பெரேரா பந்தில் ஸ்ரேயாஸ் ஐயர் (0), தோனி (28) சிக்கினர். இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 260 ரன்கள் எடுத்தது. தினேஷ் கார்த்திக் (5), மணிஷ் பாண்டே (1) அவுட்டாகாமல் இருந்தனர். 

இதன் மூலம், சர்வதேச 'டுவென்டி-20' அரங்கில், அதிக ரன் குவித்த அணிகளுக்கான பட்டியலில் இலங்கையுடன் (260/6, எதிர்- கென்யா, ஜோகனஸ்பர்க், 2007) பகிர்ந்து கொண்டது.

கடின இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு டிக்வெல்லா 25 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடி காட்டிய தரங்கா (47) அரை சத வாய்ப்பை இழந்தார். குசல் பெரேரா 77 ரன்கள் விளாசினார். குல்தீப் 'சுழலில்' கேப்டன் திசரா பெரேரா, குணரத்னே டக்-அவுட்டாகினர். சகால் பந்தில் தனஞ்செயா சிக்கினார். மாத்யூஸ் காயம் காரணமாக களமிறங்கவில்லை. முடிவில், இலங்கை அணி 17.2 ஓவரில் 172 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி வீழ்ந்தது. இந்தியா சார்பில் சகால் 4, குல்தீப் 3 விக்கெட் வீழ்த்தினர். 

இதன் மூலம், ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் இந்திய அணி 2-0 என தொடரை கைப்பற்றியது. கடைசி போட்டி 24ல் மும்பையில் நடக்கவுள்ளது. 

Read 107 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…