JoomlaLock.com All4Share.net

Background Video

விளையாட்டு

பும்ரா அபாரம் - முன்னிலையில் இந்தியா

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 42 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 187 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் கோலி 54 ரன்களும், புஜாரா 50 ரன்களும் எடுத்தனர். பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 6 ரன்கள் எடுத்திருந்தது. இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. டீன் எல்கர், ரபடா ஆட்டத்தைத் தொடர்ந்தனர். ஆடுகளம் பந்துவீச்சுக்கு உகந்ததாக இருந்ததால், ரன் சேர்க்க பேட்ஸ்மேன்கள் சிரமப்பட்டனர். 40 பந்துகளைச் சந்தித்த எல்கர் 4 ரன்களில் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் வெளியேறினார். அடுத்து அம்லா களமிறங்கினார்.

ரபடாவும் அம்லாவும்  சிறிது நேரம் தாக்குப்பிடித்து விளையாடினர். ஸ்கோர் 80 ரன்னாக உயர்ந்தபோது, ரபடா 30 ரன்களுக்கு அவுட்டானார். இஷாந்த் ஷர்மா இந்த விக்கெட்டை வீழ்த்தினார். அதன்பிறகு, அம்லா ஒருபுறம் நிலைத்து நிற்க, மற்ற வீரர்கள் வருவதும் போவதுமாக அணிவகுப்பு வரிசை நடத்தினார்கள். 61 ரன்கள் சேர்த்த அம்லா 7-வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். வேகப்பந்து வீச்சாளர் பிலாண்டர் 35 ரன்கள் எடுத்தார். முடிவில் தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 194 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணித் தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளும், இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 

7 ரன்கள் பின்தங்கிய இந்திய அணி 2-வது இன்னிங்ஸைத் துவங்கியது. துவக்க வீரர்களாக முரளி விஜயும், பார்த்திவ் பட்டேலும் களமிறங்கினர். பார்த்திவ் பட்டேல் துவக்க வீரராக களமிறக்கப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பட்டேல் 16 ரன்களில் அவுட்டானார். அடுத்து ராகுல் களமிறங்கினார். ராகுலும், விஜயும் இணைந்து மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். இன்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் எடுத்துள்ளது. விஜய் 13 ரன்களுடனும், ராகுல் 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென்னாப்பிரிக்க அணியை விட 42 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Read 37 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…