தென் ஆப்பிரிக்கா அணி தங்கள் நாட்டில் பெற்ற தொடர் வெற்றிகளை (17) கோலி படை முடிவுக்குக் கொண்டு வந்து டர்பன் ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. இதன் மூலம் தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.
இதனால் முன்னதாக தென் ஆப்பிரிக்கா கேப்டன் எடுத்த அபாரமான சதம் வீணானது. விராட் கோலி 33-வது ஒருநாள் சதமான இது வெற்றி விரட்டல் சத எண்ணிக்கையில் 20 ஆக இது அமைந்தது.
270 ரன்கள் வெற்றி இலக்கை இந்திய அணி கோலியின் சதம், ரஹானேயின் அபாரமான 79 ரன்களுடன் 45.3 ஒவர்களில் எடுத்து வெற்றி ஈட்டியது. கோலி-ரஹானே கூட்டணி 3-வது விக்கெட்டுக்காக 187 ரன்களைச் சாதித்து டர்பனில் 3-வது விக்கெட்டுக்கான அதிகபட்ச கூட்டணி சாதனை ஆகும். விராட் 119 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 112 ரன்கள் எடுத்து கடைசியில் ஆட்டமிழக்க, தோனி ஒரு புல் ஷாட் பவுண்டரி மூலம் வெற்றி ரன்களை அடித்தார்.
அபாரமாக பந்து வீசிய குல்தீப் யாதவ் “269 நல்ல ஸ்கோர், 45-46 ஓவர்களில் விரட்டி விடுவோம்” என்றார் அதுதான் நடந்தது.
விரட்டல் புகழ் விராட் கோலி தனது 33வது ஒருநாள் சதத்தை அபாரமாக எடுத்து முடித்தார்.