JoomlaLock.com All4Share.net

Background Video

விளையாட்டு

ஜூனியர் உலகக் கோப்பை : நான்காவது முறையாகக்  வென்றது  இந்திய அணி

ஜூனியர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 4-வது முறையாகக் கோப்பையை வென்றது. 

நியூசிலாந்தின் பே ஓவல் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. பேட்டிங் தேர்வுசெய்த ஆஸ்திரேலிய அணிக்குத் தொடக்கம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. அந்த அணி 59 ரன்கள் சேர்ப்பதற்குள், 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.

இந்திய அணியின் இஷான் பரோல் மற்றும் கமலேஷ் நகர்கோட்டி ஆகியோர் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்குக் கடும் நெருக்கடிகொடுத்தனர்.

இதையடுத்து, 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த உப்பல் மற்றும் மெர்லோ ஜோடி, ஆஸ்திரேலிய அணியைச் சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த ஜோடி, 4-வது விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், 34 ரன்களுடன் உப்பல் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த மெக்ஸ்வீனி, 23 ரன்களில் வெளியேறினார். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுமுனையில் சிறப்பாக ஆடி மெர்லோ அரை சதம் அடித்தார்.

இதனால், ஆஸ்திரேலிய அணி 250 ரன்களைக் கடந்துவிடும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், மெர்லோ 76 ரன்களில் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி ரன் குவிப்பு கட்டுப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, சிறப்பாகப் பந்துவீசிய இந்திய அணி, 47.2 ஓவர்களில் 216 ரன்களில் ஆஸ்திரேலிய அணியை ஆட்டமிழக்கச் செய்தது.

இதையடுத்து, 217 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் பிரித்வி ஷா, மன்ஜோத் கல்ரா ஜோடி சிறப்பான தொடக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்த நிலையில், 29 ரன்களுடன் பிரித்வி ஷா ஆட்டமிழந்தார்.

அடுத்துவந்த அதிரடி வீரர் சுப்மன் கில், 31 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்தத் தொடரில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்த சுப்மன் கில், முதல்முறையாக 50 ரன்களுக்கு குறைவாப ஸ்கோருடன் இன்று ஆட்டமிழந்து வெளியேறினார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீரர் கல்ரா, சதம் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த வெற்றி இலக்கை இந்திய அணி, 38.5 ஓவர்களில் எட்டியது. கல்ரா 101 ரன்களுடனும், அவருக்கு ஒத்துழைப்புக் கொடுத்த ஹர்விக் தேசாய் 47 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.  

இந்தத் தொடரில்,  இந்திய அணி, பங்கேற்ற அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியைச்  சந்திக்காமல் இறுதிப் போட்டிக்கு வந்திருக்கிறது. முன்னதாக, லீக் சுற்றில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

2016-ம் ஆண்டு நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பை தொடரில், டிராவிட்டின்  பயிற்சியின் கீழ்,  இறுதிப் போட்டியில் இந்திய அணி,வெஸ்ட் இண்டீஸிடம் தோற்றிருந்தது. தவறுகளைச் சரிசெய்து,  இந்த முறை டிராவிட்டின் இளம் படை கோப்பையை வென்று அசத்தியுள்ளது. 

Read 153 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…