JoomlaLock.com All4Share.net

Background Video

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், எதிராளி பாதியில் விலகியதால் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் எளிதில் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். கலப்பு இரட்டையரில் இந்தியாவின் போபண்ணா ஜோடியும் இறுதிப்போட்டியை எட்டியது.

மெல்போர்ன் நகரில் நடந்து வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழா இறுதிகட்டத்துக்கு வந்து விட்டது. ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதியில் 2-ம் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 58-ம் நிலை வீரர் ஹியோன் சங்கை (தென்கொரியா) எதிர்கொண்டார்.

கிராண்ட்ஸ்லாமில் அரைஇறுதிச்சுற்றை எட்டிய முதல் தென்கொரிய நாட்டவர் என்ற பெருமையுடன் களம் இறங்கிய 21 வயதான ஹியோன்சங், பெடரரின் சாதுர்யமான ஷாட்டுகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறினார். முதல் செட்டில், எதிராளியின் 3 சர்வீஸ்களை முறியடித்து 6-1 என்ற கணக்கில் கைப்பற்றிய பெடரர் 2-வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்தினார்.

இதில் அவர் 5-2 என்ற கணக்கில் முன்னிலை வகித்த போது, ஹியோன் சங், இடது கால் பாதத்தில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெற்றார். ஆனால் தொடர்ந்து வலியால் அவதிப்பட்டதால் அத்துடன் போட்டியில் இருந்து விலகினார். 62 நிமிடங்களிலேயே முடிவுக்கு வந்த இந்த ஆட்டத்தில் பெடரர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டி ஒன்றில் பெடரர் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைப்பது இது 30-வது முறையாகும்.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…