JoomlaLock.com All4Share.net

Background Video

 இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது. இதில் முதல் இரு ஆட்டங்களில் இரு அணிகளும் தலா ஒன்றில் வெற்றி பெற்று சமநிலையில் இருந்தன. இந்த நிலையில் இந்தியா- இலங்கை அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கடற்கரை நகரான விசாகப்பட்டினத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்தது. போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.

 
இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் அசத்தல் காணமாக இலங்கை அணி 215 ரன்களில் முடக்கப்பட்டது.
 
இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் குணதிலகா 3.4 வது ஓவரில் வெளியேறினாலும் தரங்காவும், சமரவிக்ரமா நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இலங்கை அணிக்கு ரன் சேர்த்தார்கள். இந்த கூட்டணியை 22.3 வது ஓவரில் சாஹல் உடைத்தார். சமரவிக்ரமா 42 ரன்களில் அவுட் ஆனார். இதனையடுத்து தரங்கா விக்கெட்டை குல்தீப் எடுத்தார். 27.1 வது ஓவரில் சதம் நோக்கி விளையாடிய தரங்கா 95 ரன்களில் டோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார், இதனையடுத்து களமிறங்கிய வீரர்களை இந்திய பந்துவீச்சாளர்கள் நீண்ட நேரம் நிற்கவிடவில்லை. 
 
இலங்கை அணி 44.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 215 ரன்கள் எடுத்தது, இந்திய அணிக்கு 216 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.
 
இதனையடுத்து இந்திய அணி 216 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கோடு பேட்டிங்கை தொடங்கி விளையாடியது. இந்திய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளிக்கும் விதமாக இரண்டாவது ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து கலக்கிய கேப்டன் ரோகித் ஷர்மா, 3.4வது ஓவரில் 7 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து ஷிகர் தவானுடன் ஸ்ரேயாஸ் அய்யர் களமிறங்கினார். இருவரும் இலங்கை அணியின் பந்துவீச்சை பதம் பார்த்தார்கள், இரு கூட்டணியும் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தது. இருவரும் அரைசதம் கடந்து விளையாடிய போது கூட்டணி உடைந்தது. 22.4 வது ஓவரில் ஸ்ரேயாஸ் அய்யர் கேட்ச் கொடுத்து 65 ரன்களில் வெளியேறினார். பின்னர் தினேஷ் கார்த்திக்கும், ஷிகர் தவானும் தேவையான ரன்னை அடித்து 32.1 வது ஓவரிலே ஆட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தனர். 
 
இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. 31.5 வது ஓவரில் ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தினார். இறுதியில் ஷிகர் தவான் 100 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 26 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர். இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தொடர்ச்சியாக இந்தியா தொடரை வென்று வருகிறது.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…