JoomlaLock.com All4Share.net

Background Video

சர்வதேச சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் வரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை பின்னுக்கு தள்ளி நம்பர்-1 இடத்தை கைப்பற்றினார்.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் நடைபெற்றது. அதில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. இதில் இந்திய கேப்டன் விராட் கோலி சிறப்பாக செயல்பட்டு முதல் இன்னிங்ஸில் 149 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 51 ரன்களும் எடுத்திருந்தார். டெஸ்ட் போட்டிகளில் அவரது 22ஆவது சதம் இதுவாகும். மேலும் அதி விரைவாக 7000 ரன்களை எடுத்த கேப்டன் என்ற பெருமையையும் பெற்றார்.

இதன்மூலம்  சர்வதேச டெஸ்ட் அரங்கில் சிறந்த பேட்ஸ்மேன்களுக்கான ஐசிசி தரவரிசையில் 934 புள்ளிகளுடன் இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலிடம் பிடித்தார். மேலும் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 929 புள்ளிகளுடன் பின்னுக்குத்தள்ளப்பட்டார். மற்றொரு இந்திய வீரர் புஜாரா 6வது இடத்தில் உள்ளார். 

இதே போல சிறந்த பவுலர்களுக்கான பட்டியலில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் நம்பர்-1 இடத்தில் உள்ளார். தென் ஆப்ரிக்காவின் ரபாடா இரண்டாவது இடத்திலும், இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா மூன்றாவது இடத்திலும், வெரான் பிளாண்டர் நான்காவது இடத்திலும், அஷ்வின் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். 

ஆல் ரவுண்டர்களுக்கான பட்டியலில், வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹாசன் 420 புள்ளிகளுடன் நம்பர்-1 இடத்திலும், இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா 385 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், அஷ்வின் 359 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளனர்.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…