JoomlaLock.com All4Share.net

Background Video

11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27-ந்தேதிவரை நடக்கிறது. இந்தப் போட்டிக்காக 8 அணிகளும் 18 வீரர்களை ஏற்கனவே தக்க வைத்துக் கொண்டன. மற்ற வீரர்களுக்கான  ஏலம் பெங்களூரில் கடந்த  27 மற்றும் 28 ஆகிய இரண்டு தினங்களாக நடந்தது.
 
இந்த ஏலப்பட்டியலில் 360 இந்தியர்கள் உள்பட 578 பேர் இடம் பெற்று இருந்தனர். 2 நாட்கள் நடந்த இந்த ஏலத்தில் மொத்தம் ரூ.431 கோடிக்கு 169 வீரர்கள் ஏலம் போனார்கள். இதில் 56 பேர் வெளிநாட்டைச்   சேர்ந்தவர்கள். இதில் 7 பேர் நியூசிலாந்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். நியூசிலாந்து வீரரகள் 24 பேர் இடம் பெற்றதில் 7 பேர் ஏலம் எடுக்கப்பட்டு உள்ளனர்.
 
பிரண்டன் மெக்கல்லம்( சென்னை சூப்பர் கிங்ஸ்)  கனி வில்லியமசன்
(ஐதராபாத்)  டிரெண்ட் போல்ட் (டெல்லி) கொலின் டி கிராண்ட்ஹோமி 
( பெங்களூர்) கொலின் முனாரோ ( டெல்லி) டிம் சவுத்தி ( பெங்களூர்)  மிஸ்சைல் சண்டனர்( சென்னை சூப்பர் கிங்ஸ்)
 
இந்த ஏல முறையை  தற்போது நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் சங்கம் குற்றம்சாட்டி உள்ளது.
 
நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் சங்க தலைவர் ஹீத் மில்ஸ் கூறும் போது இந்தியன் பிரிமீயர் லீக் ஏலம் விடும் முறை  கொடூரமானது மற்றும் கண்ணியமற்றது.  விளையாட்டு வீரர்களின் வாழ்வாதாரங்களுடன் விளையாட  இது  ஒரு முறையற்ற வழி என்று கூறினார்.
 
நான் முழு அமைப்பும் பழமையானது என்று நினைக்கிறேன். இது வீரர்களுக்கு அவமானகரமானது. அவர்கள்  கால்நடைகளை போல் அணிவகுத்து நிற்கிறார்கள் என கூறி உள்ளார்.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…