JoomlaLock.com All4Share.net

Background Video

இந்தியா–இலங்கை அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கட்டாக்கில் இன்று நடக்கிறது.

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 0–1 என்ற கணக்கிலும், ஒரு நாள் தொடரை 1–2 என்ற கணக்கிலும் பறிகொடுத்த இலங்கை அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது.

இதன்படி இந்தியா–இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

‘புதுமாப்பிள்ளை’ கேப்டன் விராட் கோலி இந்த தொடரிலும் ஆடாததால் ரோகித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக தொடருகிறார். ஷிகர் தவான், புவனேஷ்வர்குமார் ஆகியோருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ரோகித் சர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரராக லோகேஷ் ராகுல் களம் இறங்குவார்.

மிடில் வரிசையில், ஸ்ரேயாஸ் அய்யர், தினேஷ் கார்த்திக், மனிஷ் பாண்டே, டோனி, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் இந்திய அணிக்கு பலம் சேர்க்கிறார்கள்.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…