JoomlaLock.com All4Share.net

Background Video

இந்திய கிரிக்கெட் அணியின்வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, 29. இவரது மனைவி ஹாசின் ஜஹான். 'தனது கணவர் ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளதாக தெரிவித்தார். இதை ஷமி மறுத்தார். இதனிடையே, கோல்கட்டா போலீசில் நேற்று முறைப்படி புகார் செய்தார்.

இதில் ஹாசின் கூறியது: முகமது ஷமி என்னை மட்டும் ஏமாற்றவில்லை. இந்திய தேசத்தையும் ஏமாற்றி உள்ளார். இவர் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டார். இதற்காக பாகிஸ்தானை சேர்ந்த அலிஷ்பா என்ற பெண்ணிடம் இருந்து பணம் பெற்றுள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த தொழிலதிபர் முகமது பாய் என்பவரின் துாண்டுதல் பேரில் இது நடந்தது. இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

கணவர் ஷமி மீது சூதாட்டபுகார் தெரிவித்துள்ள ஹாசின், எந்த போட்டியில் சூதாட்டம் நடந்தது, ஷமி என்ன செய்தார், எவ்வளவு பணம் வாங்கினார் என்பது போன்ற எந்த விவரங்களையும் தெரிவிக்கவில்லை. ஷமி நம்பிக்கை

மனைவி புகார் குறித்து முகமது ஷமி கூறியது: என் மீது, மனைவி ஹாசின் கொடுத்துள்ள அனைத்து புகார்களும் பொய்யானவை. இதற்கு எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை. எங்கள் இருவருக்கும் எவ்வித பிரச்னையும் இல்லை. சமீபத்தில் ஹாசின் வெளியிட்ட, ஹோலி கொண்டாடிய படங்களை பார்த்தால் இது தெரியும்.தென் ஆப்ரிக்க தொடர் முடிந்து திரும்பிய பிறகு, இருவரும் இணைந்து 'ஷாப்பிங்' சென்று வந்தோம். தற்போது திடீரென குற்றம் சுமத்துகிறார். இதன் பின்னணியில் யாரோ உள்ளனர் எனத் தெரிகிறது.

இதுகுறித்து மனைவியிடம் பேச முயற்சித்து வருகிறேன்.ஆனால், அவர் எனது அலைபேசிக்கு பதில் தர மறுக்கிறார். அவரது அப்பா நன்றாகத் தான் பேசினார். விரைவில் இப்பிரச்னை தீரும் என நம்புகிறேன். ஏனெனில், நான் எப்போதும் போன்று தான் உள்ளேன். தொடர்ந்து மனைவியுடன் வாழ விரும்புகிறேன். இவ்வாறு முகமது ஷமி கூறினார்.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…