JoomlaLock.com All4Share.net

Background Video

தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு, விராத் கோஹ்லி தலைமையிலான 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணிக்கு எதிரான தொடர் முடிந்ததும், வரும் ஜனவரி மாதம் இந்திய அணி தென்னாப்பரிக்கா செல்ல உள்ளது. அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட, விராத் கோஹ்லி தலைமையிலான 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

விராத் கோஹ்லி(கேப்டன்), விஜய், ராகுல், தவான், புஜாரா, ரஹானே, ரோஹித் சர்மா, அஸ்வின், ரவீந்தர ஜடேஜா, சாகா, பார்திவ் படேல், ஹர்திக் பாண்டயா, புவனேஷ்வர் குமார், ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், பும்ரா.

இலங்கைக்கு எதிரான டுவென்டி-20 தொடருக்கான அணியையும் பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் கேப்டன் கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு இடம் கிடைத்துள்ளது.

அணி விவரம்: ரோஹித்(கேப்டன்), ராகுல், ஷிரேயாஸ் ஐயர், மணீஷ், தினேஷ் கார்த்திக், தோனி, ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், சாஹல், குல்தீப், தீபக் ஹோடா, பும்ரா, சிராஜ், பாசில் தம்பி, உனத்கட்

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…