JoomlaLock.com All4Share.net

Background Video

2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் (23-வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்) தென்கொரியாவின் பியாங்சங் நகரில் கடந்த 8-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது.
 
இதில் 93 நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்துகொண்டனர். ரஷியாவை சேர்ந்த வீரர்கள் ஒலிம்பிக் போட்டியின் போது ஊக்கமருந்து உட்கொண்டது நிருபிக்கப்பட்டதை அடுத்து, அந்நாட்டின் ஒலிம்பிக் கமிட்டிக்கு, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தடை விதித்தது. இதையடுத்து அந்நாட்டின் வீரர்கள் தனிப்பட்ட போட்டியாளர்களாக களமிறங்கினர்.
 
எக்குவடோர், மலேசியா, நைஜீரியா, சிங்கப்பூர், உள்ளிட்ட நாடுகள் முதன்முதலாக பங்குபெறுகின்றன. இந்த போட்டியில் ஐஸ் ஆக்கி, பனிச்சறுக்கு, ஸ்கேட்டிங் உள்பட 15 வகையான விளையாட்டுகள் இருபாலருக்கும் நடத்தப்பட்டன. இதில் இந்தியா, அமெரிக்கா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், சிலி, கனடா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஜப்பான், மலேசியா, நியூசிலாந்து, நெதர்லாந்து உள்பட 92 நாடுகளை சேர்ந்த 2,952 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
 
இதில் நார்வே அணி 14 தங்கம், 14 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்தது. அதைத்தொடர்ந்து ஜெர்மனி 14 தங்கம், 10 வெள்ளி, 7 வெண்கலம் என 31 பதக்கங்கள் வென்று இரண்டாவது இடம் பிடித்தது. மூன்றாவது இடத்தை கனடா பிடித்தது. அந்த அணி 11 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. அமெரிக்கா நான்காவது இடத்தையும், நெதர்லாந்து ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…