JoomlaLock.com All4Share.net

Background Video

ஞாயிற்றுக்கிழமை, 28 ஜனவரி 2018 00:00

ஆஸ்திரேலிய ஓபன் : பட்டம் வென்றார் பெடரர்

மெல்போர்ன் நகரில் நடந்து வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் பெடரர் (சுவிட்சர்லாந்து)- மரின் சிலிச் (குரோஷியா) மோதினர். 5 செட்கள் வரையில் நீடித்த ஆட்டத்தில் 6-2 6-7 (5-7) 6-3 3-6 6-1 என்ற செட் கணக்கில் பெடரர் போராடி வெற்றிப்பெற்றார்.
 
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தும் வீரரான பெடரர் முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் எளிதில் கைப்பற்றினார். குரோஷியா வீரர் மரின் சிலிச் இரண்டாவது செட்டில் பெடரருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.6-7 (5-7) என்ற கணக்கில் செட்டை தனதாக்கினார். இதனையடுத்து ஒருவரும் ஒரு செட்டை கைப்பற்றி 2-2 என்ற நிலையில் இருந்தனர். இதனையடுத்து ஆட்டம் வெற்றியை நிர்ணயம் செய்யும் 5-வது செட்டை தனதாக்கியது. 
 
5-வது செட்டில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பெடரர் 3-0 என்ற கணக்கில் முன்னிலையை தொட்டார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி செட்டை 6-1 என்ற கணக்கில் கைப்பற்றிய சிலிச்சை வீழ்த்தினார். பெடரர் சாம்பியன் பட்டம் வென்றார். 
 
சுவிட்சர்லாந்து வீரர் பெடரருக்கு இது 20-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். 6-வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பட்டத்தை தனதாக்கி உள்ளார். அவருக்கு பலரது தரப்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
 
பட்டம் வென்ற பெடரர் பேசுகையில், “நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன், என்னால் நம்பமுடியவில்லை. இந்த இறுதிக்காக நான் நீண்ட நாள் காத்திருந்தேன். இந்த மாலை வேலையில் இது மிகவும் எளிதாகி உள்ளது. வெற்றியில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன், என்னுடைய கனவு நினைவாகி உள்ளது. விசித்திரம் தொடரும்,” என கூறினார். 

 

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…