JoomlaLock.com All4Share.net

Background Video

ஐ.பி.எல்., தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்று நடக்கஉள்ளது. அஷ்வின், பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்டோரை தேர்வு செய்ய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. தமிழக சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின், மீண்டும் சென்னை அணிக்கு தேர்வு செய்யப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. Image result for ipl 2018 auction today images photos

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) உள்ளூர் 'டுவென்டி-20' தொடர் கடந்த 2008 ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதன் 11வது 'சீசன்' வரும் ஏப்ரல் 7ல் துவங்குகிறது. இதில் மும்பை, டில்லி, ஐதராபாத், பெங்களூரு, பஞ்சாப், கோல்கட்டா அணிகளுடன் இரண்டு ஆண்டு தடையிலிருந்து மீண்ட சென்னை, ராஜஸ்தான் அணிகள் இணைகின்றன. ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 25 வீரர்கள் இடம் பெறுவர். எட்டு அணிகளில் இதுவரை 18 வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள, 182 வீரர்களின் இடங்களுக்கான ஏலம் இன்றும், நாளையும் பெங்களூருவில் நடக்க உள்ளது. 578 வீரர்கள் இந்த ஏலத்தில், 8 அணியால் விடுவிக்கப்பட்ட மற்றும் இதுவரை விளையாடாத வீரர்கள் என மொத்தம் 578 பேர் பங்கேற்கின்றனர். இதில் 361 வீரர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள். ஒவ்வொரு அணியும், தலா ரூ.

80 கோடி வரை வீரர்களை தேர்வு செய்யலாம். ஆனால், தக்கவைக்கப்பட்ட வீரர்களின் சம்பளம் இத்தொகையிலிருந்து கழிக்கப்படும். மீதம் உள்ள தொகையை மட்டுமே ஏலத்தில் பயன்படுத்த முடியும் நட்சத்திர வீரர்கள்: இந்தியாவின் அஷ்வின், யுவராஜ், காம்பிர், தவான், ரகானே, ஹர்பஜன், ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து), ஸ்டார்க் (ஆஸி.,), கெய்ல் (வெ.இண்டீஸ்), போலார்டு (வெ.இண்டீஸ்), மேக்ஸ்வெல் (ஆஸி.,), ஜோ ரூட் (இங்கிலாந்து), சாகிப் (வங்கதேசம்), டுபிளசி (தென் ஆப்ரிக்கா), டுவைன் பிராவோ (வெ.இண்டீஸ்), வில்லியம்சன் (நியூசி.,) உள்ளிட்ட வீரர்கள் நட்சத்திர அந்தஸ்து பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். இவர்களின் அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  Image result for ipl 2018 auction today images photos

அஷ்வினுக்கு சிக்கல்: சென்னை அணியில் தோனி, ரெய்னா, ஜடேஜா தக்கவைக்கப்பட்டுள்ளனர். இதனால், தமிழக 'சுழல்' வீரர் அஷ்வின் விடுவிக்கப்பட்டுள்ளார். இவர், கடந்த 2009-15 வரை சென்னை அணிக்காக விளையாடினார்.

ஏற்கனவே, மூன்று இந்திய வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளதால், அஷ்வினை 'மேட்ச் கார்டு' சலுகையில் எடுக்க முடியாது.இதனால், டுவைன் பிராவோ அல்லது ஸ்டார்க் சென்னை அணியில் இடம் பிடிக்கலாம். வேறு அணிகள் அஷ்வினை எடுக்காவிட்டால், ஏலத்தின் மூலம் மீண்டும் சென்னை அணிக்கு திரும்பலாம். ஸ்டோக்சிற்கு 'மவுசு':இங்கிலாந்து 'ஆல்-ரவுண்டர்' ஸ்டோக்ஸ் கடந்த ஆண்டு புனே அணி சார்பில் அதிகபட்சமாக ரூ. 14.5 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

சமீபத்தில் இவர், இங்கிலாந்தில் உள்ள இரவு விடுதிக்கு வெளியே மது போதையில் ஒருவருடன் மோதலில் ஈடுபட்டார். இதனால், ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இடம் பெறவில்லை.இருப்பினும், கடந்த முறையைப்போல 'காஸ்ட்லீ' வீரராக ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது. மற்றபடி, ரகானே, காம்பிர், இளம் 'சுழல்' வீரர்களான சகால், குல்தீப் மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பையில் அசத்தி வரும் கேப்டன் பிரித்வி ஷா, கம்லேஷ், நியூசிலாந்தின் கோலின் முன்ரோ உள்ளிட்டோர் மீதும் கவனம் பதிந்துஉள்ளது.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…