JoomlaLock.com All4Share.net

Background Video

இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின்போது, இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா மூன்றாவது முறையாக இரட்டை சதம் அடித்து சாதனை புரிந்துள்ளார்.

பஞ்சாபிலுள்ள மெகாலியில் நடைபெறும் இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். 153 பந்துகளை சந்தித்த அவர் 12 சிக்ஸர்ஸ் மற்றும் 13 பவுண்டிரிகளுடன் மொத்தம் 208 ரன் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்தியா இந்தப் போட்டியில் 50 ஓவர்களுக்கு 392 ரன்கள் எடுத்துள்ளது.

இலங்கை அணியின் பேட்டிங் தொடக்கத்திலேயே சொதப்பியது. இலங்கையின் மேத்யூஸ் மட்டும் அதிகபட்சமாக 111 ரன்கள் எடுத்தார். சாஹல் 3 விக்கெட்டும், பும்ரா 2 விக்கெட்டும், புவனேஷ்வர் குமார், பாண்டியா, வாஷிங்டன் சுந்தர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

393 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை 50 ஓவருக்கு 251 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்தியா 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. இந்த போட்டியில் வென்றதன் மூலம் இந்தியா ஒருநாள் தொடரை 1-1 என்று சமன் செய்து உள்ளது.


Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…