JoomlaLock.com All4Share.net

Background Video

திங்கட்கிழமை, 26 பிப்ரவரி 2018 00:00

இந்திய அணிக்கு ஐசிசி டெஸ்ட் விருது

இந்திய கிரிக்கெட் அணிக்கு ஐசிசி-யின் டெஸ்ட் சாம்பியன் ஷிப் விருது வழங்கப்பட்டது.

ஆண்டுதோறும் டெஸ்ட் தர வரிசையில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் இந்த ஆண்டு முதலிடம் பிடித்த இந்திய கிரிக்கெட் அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருதுக்கான கதாயுதம் நேற்றுமுன்தினம் கேப்டவுன் நகரில் வழங்கப்பட்டது.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியிடம், ஐசிசி சார்பில் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சுனில் கவாஸ்கர், தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரீம் பொல்லாக் ஆகியோர் இந்த விருதை வழங்கினர். மேலும் இந்திய அணிக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. 2-வது முறையாக இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருதை இந்தியா வென்றுள்ளது.

விருது வென்றது குறித்து விராட் கோலி கூறும்போது, “விருது வென்றது மகிழ்ச்சியான விஷயம். டெஸ்ட் போட்டிகளில் நாங்கள் சிறப்பான முறையில் விளையாடி வருகிறோம் என்பதில் பெருமை கொள்கிறோம். அணி வீரர்கள் அனைவருமே சிறப்பான முறையில் செயல்படுகின்றனர்” என்றார்.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…