JoomlaLock.com All4Share.net

Background Video

வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய கால்பந்து நட்சத்திரம் மெஸ்சிக்கு 21 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் மெஸ்சி, 28. தற்போது ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 2007 முதல் 2009 வரை, ரூ. 30 கோடி வரை வரி ஏய்ப்பு செய்ததாக, பார்சிலோனா நீதிமன்றத்தில் மெஸ்சி மீது வழக்கு தொடரப்பட்டது.

இவரது சார்பில் வாதிடுகையில்,'தந்தை ஜார்ஜ் ஹொராசியோ தான் நிதி விஷயங்களை கவனித்து வந்தார். எனக்கு எதுவும் தெரியாது,' என, தெரிவிக்கப்பட்டது.

இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மூன்று விதமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டது உறுதியானதால், மெஸ்சி மற்றும் அவரது தந்தை ஹொராசியோவுக்கு தலா 21 மாத தண்டனை விதிக்கப்பட்டது. தவிர, மெஸ்சிக்கு ரூ. 15 கோடி, ஹொராசியோவுக்கு ரூ.11 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

ஸ்பெயின் சட்டப்படி முதன் முறையாக குற்றம் செய்து, 2 ஆண்டுக்குள் தண்டனை பெற்றால், உடனடியாக சிறைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. இதனால் மெஸ்சி, அவரது தந்தையை சிறையில் அடைக்க வாய்ப்பு இல்லை. இவர்கள் தண்டனையை எதிர்த்து ஸ்பெயினில் உள்ள சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

.

அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னணி வீரர் லயோனல் மெஸ்சி, கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த கோபா அமெரிக்கா கோப்பைக்கான பைனலில், சிலிக்கு எதிராக தோல்வி அடைந்ததால், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். பார்சிலோனா கிளப்புக்காக மெஸ்சி தொடர்ந்து விளையாடுவார். இதனிடையே போர்ச்சுக்கல் கேப்டனும், ரியல் மாட்ரிட் அணியின் முன்கள வீரருமான கிறிஸ்டியானா ரொனால்டோவை, மெஸ்சியின் எதிரியாகவே, கால்பந்து ரசிகர்கள் பார்க்கின்றனர். இதனிடையே ஓய்வு முடிவை மெஸ்சி மறுபரிசீலனை செய்வார் என நம்புவதாக ரொனால்டோ கூறியிருப்பது, வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்து அவர் மேலும் கூறுகையில், மெஸ்சி மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளார். தோல்விகளுக்கும், ஏமாற்றங்களுக்கும் அவர் இன்னும் பழக்கப்படவில்லை. ஒரு பெனால்டியை மிஸ் செய்வதால், அவர் மோசமான வீரராகி விட மாட்டார். மெஸ்சியை கண்ணீருடன் பார்ப்பது காயப்படுத்துகிறது. அர்ஜென்டினா அணிக்காக அவர் மீண்டும் விளையாடுவார் என நம்புகிறேன் என்றார். இதனிடையே மெஸ்சி தனது ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு இருப்பதாக, அர்ஜென்டினா பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெரும் அறிவிப்பை மெஸ்சி திரும்ப பெற வேண்டும் என்று அர்ஜென்டினா அதிபர் மற்றும் ரசிகர்கள் கேட்டுக்கொண்டனர். கோபா அமெரிக்கா கால்பந்து இறுதி போட்டியில் சிலியிடம் அர்ஜென்டினா தோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று மெஸ்சி ஓய்வு பெரும் முடிவை நேற்று அறிவித்தார். அவரது அறிவிப்பு உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களிடையே அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவில் இருந்து திரும்பிய அர்ஜென்டினா அணிக்கு அந்நாட்டு ரசிகர்கள் உற்ச்சாக வரவேற்பு அளித்தனர். மெஸ்சிக்கு ஆதரவாக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். மெஸ்சியின் ஓய்வு கால்பந்து விளையாட்டுக்கு பேரிழப்பு என ரசிகர்கள் கூறியுள்ளனர். அவர் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஓய்வு பெரும் முடிவை திரும்ப பெறுமாறு அர்ஜென்டினா அதிபர் மார்சியோ மாக்ரி, அர்ஜென்டினா அணியின் முன்னாள் கேப்டன் மரடோனா ஆகியோரும் கேட்டுக்கொண்டுள்ளனர். கோபா இறுதி போட்டியில் கடைசி வரை இரு அணிகளும் கோல் போடாததால் பெனால்டி சூட் முறையில் முடிவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மெஸ்சி அடித்த பந்து கோலாக மாறாமல் வெளியேறியதால் அர்ஜென்டினா வெற்றி வாய்ப்பு பறிபோனது.

அர்ஜென்டீனா லியோனல் மெஸ்ஸி தேசிய அணி போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்ததை குறித்து அர்ஜென்டீனாவின் முன்னாள் வீரர் டீகோ மரடோனா மெஸ்சியை தொடர்ந்து விளையாட ஆலோசனை தெரிவித்துள்ளார்...

Diego Maradona has urged Argentina captain Lionel Messi not to retire from international football despite their Copa America final defeat to Chile.

In what was a tense match where both sides played out a goalless draw in normal time, extra-time followed a similar pattern of play to send the teams into a dreaded penalty shootout.

Messi missed the first penalty in the 4-2 shootout defeat, which was the third consecutive loss in a major final for La Albiceleste.

The Barcelona forward was devastated after the game and made known his intention to quit international football.

 

Maradona, who said prior to the Copa America Centenario that Messi lacked the personality to lead his country, has asked of the five-time Ballon d'Or winner to retract his decision and play on until the 2018 World Cup in Russia.

"Messi has to stay in the national team. He will go to Russia in form to be world champion," Maradona told La Nacion.

"He has to rely more on boys who can help take the team forward and less on those who say they have to go.

"Those who are saying he should quit are doing it so that we won't see what a disaster Argentine football has become."

 

Maradona also joined in the criticism of the Argentina Football Association (AFA), which comes after Messi's outburst before the final, where he blamed the country's football governing body for poor planning which included a delayed flight at the Houston airport.

"I am very sorry and very angry with what is happening to Argentine football," he added. "We hit bottom, we reached the bottom."

Messi has yet to pick up a winners' medal at senior international level, only managing an Olympic men's football gold medal in 2008 to go with the FIFA world youth championship title he picked up in 2005.

இன்று காலை 6.3௦am மணிக்கு நடந்த கோபா அமெரிக்கா இறுதி போட்டியில் சிலியிடம் அர்ஜென்டினா மோதியது.
இரு அணியும் வலுவாக இருந்ததால் போட்டி கடுமையாக இருந்தன. அர்ஜென்டினாவின் மெஸ்ஸி உதவி ஏதுமில்லாமல் அநேக முயற்சி செய்தும் பலன் இல்லை.
கடைசியில் பெனல்டீ முறையில் இறுதி வாய்ப்புல் மெஸ்ஸி வாய்ப்பை தவறியதால் 2 - 4 என்ன கோல் கணக்கில் சிலி இரண்டாம் முறையாக கோப்பையை
கைப்பற்றியது...

பக்கம் 1 / 2
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…