JoomlaLock.com All4Share.net

Background Video

அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னணி வீரர் லயோனல் மெஸ்சி, கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த கோபா அமெரிக்கா கோப்பைக்கான பைனலில், சிலிக்கு எதிராக தோல்வி அடைந்ததால், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். பார்சிலோனா கிளப்புக்காக மெஸ்சி தொடர்ந்து விளையாடுவார். இதனிடையே போர்ச்சுக்கல் கேப்டனும், ரியல் மாட்ரிட் அணியின் முன்கள வீரருமான கிறிஸ்டியானா ரொனால்டோவை, மெஸ்சியின் எதிரியாகவே, கால்பந்து ரசிகர்கள் பார்க்கின்றனர். இதனிடையே ஓய்வு முடிவை மெஸ்சி மறுபரிசீலனை செய்வார் என நம்புவதாக ரொனால்டோ கூறியிருப்பது, வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்து அவர் மேலும் கூறுகையில், மெஸ்சி மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளார். தோல்விகளுக்கும், ஏமாற்றங்களுக்கும் அவர் இன்னும் பழக்கப்படவில்லை. ஒரு பெனால்டியை மிஸ் செய்வதால், அவர் மோசமான வீரராகி விட மாட்டார். மெஸ்சியை கண்ணீருடன் பார்ப்பது காயப்படுத்துகிறது. அர்ஜென்டினா அணிக்காக அவர் மீண்டும் விளையாடுவார் என நம்புகிறேன் என்றார். இதனிடையே மெஸ்சி தனது ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு இருப்பதாக, அர்ஜென்டினா பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெள்ளிக்கிழமை, 01 ஜூலை 2016 00:00

போர்ச்சுகல் அணி வெற்றி

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் முதல் காலிறுதியில் போர்ச்சுகல் அணி பெனால்டி ஷூட் அவுட் முறையில் போலந்து அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் யூரோ கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. மொத்தம் 24 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் நடப்பு 'சாம்பியன்' ஸ்பெயின் உள்ளிட்ட 16 அணிகள் வெளியேறி விட்டன. இந்நிலையில் முதல் காலிறுதி போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோவை கேப்டனாக கொண்ட போர்ச்சுகல் அணி, போலந்து அணியை சந்தித்தது.

ஆட்டம் துவங்கிய 5வது நிமிடத்திலேயே போலந்து அணியின் லிவான்டவுஸ்கி கோல் அடித்து, தனது அணிக்கு முன்னிலை பெற்று தந்தார். பதில் கோல் அடிக்கும் முனைப்பில் போராடிய போர்ச்சுகல் அணிக்கு 33வது நிமிடத்தில் பலன் கிடைத்தது. அந்த அணியின் ரினாடோ சான்சஸ் கோல் அடித்து அசத்தினார். முதல் பாதியில் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தது.

2வது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் போடும் முனைப்பில் ஆக்ரோஷமாக போராடின. ஆனால் இரு அணிகளும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை வீணாக்கியதால், கோல் போட முடியவில்லை. பின் ஒதுக்கப்பட்ட கூடுதல் நேரத்திலும் கோல் அடிக்கும் முயற்சி பலனளிக்கவில்லை. இதனையடுத்து ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட் முறைக்கு சென்றது.

இதில் போலந்து அணியின் பிளாஸிசைகவுஸ்கி தனது வாய்ப்பை தவறவிட, போர்ச்சுக்கல் அணி தனது அனைத்து வாய்ப்பையும் கோல் ஆக்கியது. முடிவில் 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற போர்ச்சுக்கல் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

வியாழக்கிழமை, 23 ஜூன் 2016 00:00

யூரோ 2016 கால்பந்து போட்டி - Round 16

யூரோ 2016 கால்பந்து  போட்டின்  நேற்றைய  ஆட்டத்தில் போர்ச்சுகல் மற்றும் அங்கேறிய மோதின  இதில்  இரு  அணிகளும் 3-3 என்ற கோல் கணக்கில்  ஆட்டத்தை டிரா செய்தனர்  இதன் மூலம் இரு அணிகளும் ரவுண்ட்  16க்கு நுழைந்தன ..

அடுத்த போட்டில் ஐஸ்லண்ட் மற்றும் ஆஸ்திரிய மோதின 2-1 என்ற கோல்  கணக்கில் ஐஸ்லண்ட்  வெற்றி பெற்று ரவுண்ட்  16க்கு  தகுதியானது

 

அடுத்த E பிரிவில்  ஸ்விடீன் மற்றும் பெல்ஜியம் மோதின இதில் 1-0 என்ற  கோல்  கணக்கில் ஸ்விடீன்னை  வீழ்த்தி  பெல்ஜியம்  ரவுண்ட்  16க்கு  தகுதியானது

 

மற்றொரு ஆட்டத்தில் இத்தாலி  மற்றும் ஐர்லாந்து மோதின இதில்  1-0 என்ற  கோல்  கணக்கில்  ஐர்லாந்து வெற்றி பெற்று ரவுண்ட்  16க்கு  தகுதியானது 

 

ஏற்கனவே இத்தாலி ,ஜெர்மன் ,பிரான்ஸ் ,இங்கிலாந்து ,வாலஸ் ,சுவிஸ்சர்லாண்ட் , குரேஷியா,ஸ்பெய்ன் ,போலந்து ,நோர்த்.ஐர்லாந்து,ஸ்லோவாகிய.. போன்ற  நாடுகள்  ரவுண்ட் 16 க்கு தகுதி பெற்றன .

 

SOURCE : newtamiltimes.com

 

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…