JoomlaLock.com All4Share.net

Background Video

வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய கால்பந்து நட்சத்திரம் மெஸ்சிக்கு 21 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் மெஸ்சி, 28. தற்போது ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 2007 முதல் 2009 வரை, ரூ. 30 கோடி வரை வரி ஏய்ப்பு செய்ததாக, பார்சிலோனா நீதிமன்றத்தில் மெஸ்சி மீது வழக்கு தொடரப்பட்டது.

இவரது சார்பில் வாதிடுகையில்,'தந்தை ஜார்ஜ் ஹொராசியோ தான் நிதி விஷயங்களை கவனித்து வந்தார். எனக்கு எதுவும் தெரியாது,' என, தெரிவிக்கப்பட்டது.

இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மூன்று விதமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டது உறுதியானதால், மெஸ்சி மற்றும் அவரது தந்தை ஹொராசியோவுக்கு தலா 21 மாத தண்டனை விதிக்கப்பட்டது. தவிர, மெஸ்சிக்கு ரூ. 15 கோடி, ஹொராசியோவுக்கு ரூ.11 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

ஸ்பெயின் சட்டப்படி முதன் முறையாக குற்றம் செய்து, 2 ஆண்டுக்குள் தண்டனை பெற்றால், உடனடியாக சிறைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. இதனால் மெஸ்சி, அவரது தந்தையை சிறையில் அடைக்க வாய்ப்பு இல்லை. இவர்கள் தண்டனையை எதிர்த்து ஸ்பெயினில் உள்ள சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

.

அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னணி வீரர் லயோனல் மெஸ்சி, கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த கோபா அமெரிக்கா கோப்பைக்கான பைனலில், சிலிக்கு எதிராக தோல்வி அடைந்ததால், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். பார்சிலோனா கிளப்புக்காக மெஸ்சி தொடர்ந்து விளையாடுவார். இதனிடையே போர்ச்சுக்கல் கேப்டனும், ரியல் மாட்ரிட் அணியின் முன்கள வீரருமான கிறிஸ்டியானா ரொனால்டோவை, மெஸ்சியின் எதிரியாகவே, கால்பந்து ரசிகர்கள் பார்க்கின்றனர். இதனிடையே ஓய்வு முடிவை மெஸ்சி மறுபரிசீலனை செய்வார் என நம்புவதாக ரொனால்டோ கூறியிருப்பது, வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்து அவர் மேலும் கூறுகையில், மெஸ்சி மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளார். தோல்விகளுக்கும், ஏமாற்றங்களுக்கும் அவர் இன்னும் பழக்கப்படவில்லை. ஒரு பெனால்டியை மிஸ் செய்வதால், அவர் மோசமான வீரராகி விட மாட்டார். மெஸ்சியை கண்ணீருடன் பார்ப்பது காயப்படுத்துகிறது. அர்ஜென்டினா அணிக்காக அவர் மீண்டும் விளையாடுவார் என நம்புகிறேன் என்றார். இதனிடையே மெஸ்சி தனது ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு இருப்பதாக, அர்ஜென்டினா பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

செவ்வாய்க்கிழமை, 28 ஜூன் 2016 00:00

ஐரோ 2016 நேற்றைய போட்டிகள்

ஐரோ 2016 போட்டியில் நேற்று இத்தாலி மற்றும் ஸ்பெயின் அணி மோதின,
இதில் இத்தாலி அதிரடி அடத்தால் இரு கோல் அடித்து இத்தாலி 2 - ௦ ஸ்பெயின் கோல் கணக்கில் வெற்றி பெற்றது...

அடுத்த அடத்தில் இங்கிலாந்து மற்றும் ஐஸ்லாந்து அணி மோதின, இதில் ஐஸ்லாந்து  2 - 1  என்ன கோல் கணக்கில் இங்கிலாந்துதை வெற்றிப்பெற்றது.

இதன் முலம் நேற்றைய போட்டிகள்ளில் இத்தாலி மற்றும் ஐஸ்லாந்து அணி கால் இறுதிக்கு தகுதி பெற்றது...

 

 

கால் இறுதி பட்டியல்:

 

  
 

 

 

புதன்கிழமை, 22 ஜூன் 2016 00:00

ஸ்பெயின் அதிர்ச்சி தோல்வி

ஐரோ 2016:  கால்பந்து போட்டியில் நேற்று நடத்த அடத்தில் குரோசியா ஸ்பெயின் மோதின.
இந்த போட்டியில் ஸ்பெயின் முதல் கோல் அடித்து இறுத்தன.. அடுத்த சில நேரத்தில் குரோசியாவின் கலினிக் மற்றும் பெரிசிக் கோல் அடித்து வெற்றி பெற செய்தனர்.இதன் முலம்  குரோசியா 2 - 1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை விழ்த்தியது...

 குரூப் D  புள்ளி பட்டியலில் முதலில் உள்ள குரோசியா மற்றும் ஸ்பெயின் ரவுண்டு 16 இல் தகுதி பெற்றது ... 

 

யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெய்ன் அணி  3- 0  என்ற கோல் கணக்கில் துருக்கியை தோற்கடித்தது.

பிரான்ஸ் :இன்று அதிகாலை 12.30am நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஸ்பெய்ன் மொரட்டா இரு கோலும், நோலிடோ ஒரு கோல் அடித்து துருக்கியை வென்றனர்.
இதன் மூலம் ஸ்பெய்ன் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளன...

பக்கம் 1 / 2
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…