JoomlaLock.com All4Share.net

Background Video

இலங்கை இங்கிலாந்து அணிகள் மோதிய டி20 போட்டியில் இங்கிலாந்து அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இங்கிலாந்தில் உள்ள செளத்தாம்டன் மாநகரில் நடைபெற்றது.

இதில் நாணயசுழற்சியில் வென்று முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயக்கப்பட்ட 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுளை இழந்து 140 ஓட்டங்களே எடுத்தது.

இதில் அணியின் தொடக்க ஆட்டக்காரர் குஷால் பேரேரா 13 ஓட்டங்களில் பிலன்க்கிட் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார், அடுத்தபடியாக குணதிலகர் (26), குஷால் மென்டிஷ் (21), அணியின் தலைவர் சண்டிமால் (23), ரம்புக்வேலா (19), மகரூப் (10), அணியின் மற்ற வீரர்கள் சொர்ப ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

இங்கிலாந்து தரப்பில் ஜோர்டன் 3 விக்கெட்டும், பிலன்கிட் 2 விக்கெட்டும், டாசன் 3 விக்கெட் வீழ்த்தினார்கள்.

எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜாசன் ராய் ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் மேத்யூஸ் வீசிய முதல் ஓவரிலேயே போல்டாகி வெளியேறினார்.

அடுத்தபடியாக ஜேம்ஸ் வின்ஸ் 16 ஓட்டங்களில், மேத்யூஸ் ஓவரிலியே ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.

மேலும் இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ஜேம்ஸ் பட்லர் மற்றும் அணியின் தலைவர் இயான் மோர்கன் ஆகியோர் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.

அதிரடியாக ஆடிய பட்லர் 49 பந்தில் (73), மோர்கன் 39 பந்தில் (47) எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர். இதனால் இங்கிலாந்து 17.3 ஓவரில் 144 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆட்ட நாயகனாக இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் தெரிவு செய்யப்பட்டார்.

இங்கிலாந்து அணி (1-0) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து கிண்ணத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய கால்பந்து நட்சத்திரம் மெஸ்சிக்கு 21 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் மெஸ்சி, 28. தற்போது ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 2007 முதல் 2009 வரை, ரூ. 30 கோடி வரை வரி ஏய்ப்பு செய்ததாக, பார்சிலோனா நீதிமன்றத்தில் மெஸ்சி மீது வழக்கு தொடரப்பட்டது.

இவரது சார்பில் வாதிடுகையில்,'தந்தை ஜார்ஜ் ஹொராசியோ தான் நிதி விஷயங்களை கவனித்து வந்தார். எனக்கு எதுவும் தெரியாது,' என, தெரிவிக்கப்பட்டது.

இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மூன்று விதமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டது உறுதியானதால், மெஸ்சி மற்றும் அவரது தந்தை ஹொராசியோவுக்கு தலா 21 மாத தண்டனை விதிக்கப்பட்டது. தவிர, மெஸ்சிக்கு ரூ. 15 கோடி, ஹொராசியோவுக்கு ரூ.11 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

ஸ்பெயின் சட்டப்படி முதன் முறையாக குற்றம் செய்து, 2 ஆண்டுக்குள் தண்டனை பெற்றால், உடனடியாக சிறைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. இதனால் மெஸ்சி, அவரது தந்தையை சிறையில் அடைக்க வாய்ப்பு இல்லை. இவர்கள் தண்டனையை எதிர்த்து ஸ்பெயினில் உள்ள சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

.

அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னணி வீரர் லயோனல் மெஸ்சி, கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த கோபா அமெரிக்கா கோப்பைக்கான பைனலில், சிலிக்கு எதிராக தோல்வி அடைந்ததால், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். பார்சிலோனா கிளப்புக்காக மெஸ்சி தொடர்ந்து விளையாடுவார். இதனிடையே போர்ச்சுக்கல் கேப்டனும், ரியல் மாட்ரிட் அணியின் முன்கள வீரருமான கிறிஸ்டியானா ரொனால்டோவை, மெஸ்சியின் எதிரியாகவே, கால்பந்து ரசிகர்கள் பார்க்கின்றனர். இதனிடையே ஓய்வு முடிவை மெஸ்சி மறுபரிசீலனை செய்வார் என நம்புவதாக ரொனால்டோ கூறியிருப்பது, வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்து அவர் மேலும் கூறுகையில், மெஸ்சி மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளார். தோல்விகளுக்கும், ஏமாற்றங்களுக்கும் அவர் இன்னும் பழக்கப்படவில்லை. ஒரு பெனால்டியை மிஸ் செய்வதால், அவர் மோசமான வீரராகி விட மாட்டார். மெஸ்சியை கண்ணீருடன் பார்ப்பது காயப்படுத்துகிறது. அர்ஜென்டினா அணிக்காக அவர் மீண்டும் விளையாடுவார் என நம்புகிறேன் என்றார். இதனிடையே மெஸ்சி தனது ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு இருப்பதாக, அர்ஜென்டினா பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

ராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடந்து வருகிறது. நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 7 முறை சாம்பியனான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), 29-ம் நிலை வீரர் ஸ்டீவ் ஜான்சனை (அமெரிக்கா) சந்தித்தார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பெடரர் 6-2, 6-3, 7-5 என்ற நேர்செட்டில் ஸ்டீன் ஜான்சனை வீழ்த்தி 14-வது முறையாக கால் இறுதிக்குள் நுழைந்தார். அத்துடன் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் ஒற்றையர் பிரிவில் பெடரர் பெற்ற 306-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் அமெரிக்க முன்னாள் வீராங்கனை நவரத்திலோவாவின் சாதனையை (306 வெற்றி) பெடரர் சமன் செய்தார். கால் இறுதியில் பெடரர், குரோஷியா வீரர் மரின் சிலிச்சை எதிர்கொள்கிறார். ஜப்பான் வீரர் நிஷிகோரிக்கு எதிரான ஆட்டத்தில் மரின் சிலிச் 6-1, 5-1 என்ற செட் கணக்கில் முன்னிலையில் இருந்த போது நிஷிகோரி காயத்தால் விலகியதால் மரின் சிலிச் கால் இறுதிக்குள் நுழைந்தார். அமெரிக்க வீரர் சாம் குயர்ரியும் கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், உலகின் நம்பர் ஒன் வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 7-5, 6-0 என்ற நேர்செட்டில் ரஷிய வீராங்கனை ஸ்வெட்லானா குஸ்னெட்சோவாவை தோற்கடித்து கால் இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் 6-3, 6-1 என்ற நேர்செட்டில் மிகாசி டோய்யை (ஜப்பான்) சாய்த்து கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

இந்திய அணியின் வருங்கால வளர்ச்சி குறித்து டோனி, கோஹ்லி, அனில் கும்ப்ளே, டிராவிட் மற்றும் தெரிவாளர் பட்டோடி ஆகியோர் பெங்களூரில் ஒன்று கூடி விவாதித்தனர்.

இதன்பின்னர் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள வீரர்கள் மத்தியில் டோனி பேசினார்.

அவர் கூறுகையில், நம்மில் பலர் ஐந்து வயது இருக்கும் போதே கிரிக்கெட் விளையாட தொடங்கிவிட்டோம், இந்திய அணி முன்னோக்கி செல்ல இதுதான் சரியான தருணம் என்று நினைக்கிறேன்.

தற்போதைய அணியில் பந்துவீச்சாளர்களும், துடுப்பாட்ட வீரர்களும் சிறப்பாக அமைந்துவிட்டார்கள். 17 டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடினால் அனைவருக்கும் அது வெற்றியாக இருக்கும்.

கிரிக்கெட்டை ஜாலியாக அனுபவித்து விளையாட வேண்டும், ரசித்து அனுபவித்து விளையாடுவது மிகவும் முக்கியம் என தெரிவித்துள்ளார்.

பக்கம் 1 / 11
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…