JoomlaLock.com All4Share.net

Background Video

அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னணி வீரர் லயோனல் மெஸ்சி, கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த கோபா அமெரிக்கா கோப்பைக்கான பைனலில், சிலிக்கு எதிராக தோல்வி அடைந்ததால், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். பார்சிலோனா கிளப்புக்காக மெஸ்சி தொடர்ந்து விளையாடுவார். இதனிடையே போர்ச்சுக்கல் கேப்டனும், ரியல் மாட்ரிட் அணியின் முன்கள வீரருமான கிறிஸ்டியானா ரொனால்டோவை, மெஸ்சியின் எதிரியாகவே, கால்பந்து ரசிகர்கள் பார்க்கின்றனர். இதனிடையே ஓய்வு முடிவை மெஸ்சி மறுபரிசீலனை செய்வார் என நம்புவதாக ரொனால்டோ கூறியிருப்பது, வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்து அவர் மேலும் கூறுகையில், மெஸ்சி மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளார். தோல்விகளுக்கும், ஏமாற்றங்களுக்கும் அவர் இன்னும் பழக்கப்படவில்லை. ஒரு பெனால்டியை மிஸ் செய்வதால், அவர் மோசமான வீரராகி விட மாட்டார். மெஸ்சியை கண்ணீருடன் பார்ப்பது காயப்படுத்துகிறது. அர்ஜென்டினா அணிக்காக அவர் மீண்டும் விளையாடுவார் என நம்புகிறேன் என்றார். இதனிடையே மெஸ்சி தனது ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு இருப்பதாக, அர்ஜென்டினா பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

வியாழக்கிழமை, 23 ஜூன் 2016 00:00

யூரோ 2016 கால்பந்து போட்டி - Round 16

யூரோ 2016 கால்பந்து  போட்டின்  நேற்றைய  ஆட்டத்தில் போர்ச்சுகல் மற்றும் அங்கேறிய மோதின  இதில்  இரு  அணிகளும் 3-3 என்ற கோல் கணக்கில்  ஆட்டத்தை டிரா செய்தனர்  இதன் மூலம் இரு அணிகளும் ரவுண்ட்  16க்கு நுழைந்தன ..

அடுத்த போட்டில் ஐஸ்லண்ட் மற்றும் ஆஸ்திரிய மோதின 2-1 என்ற கோல்  கணக்கில் ஐஸ்லண்ட்  வெற்றி பெற்று ரவுண்ட்  16க்கு  தகுதியானது

 

அடுத்த E பிரிவில்  ஸ்விடீன் மற்றும் பெல்ஜியம் மோதின இதில் 1-0 என்ற  கோல்  கணக்கில் ஸ்விடீன்னை  வீழ்த்தி  பெல்ஜியம்  ரவுண்ட்  16க்கு  தகுதியானது

 

மற்றொரு ஆட்டத்தில் இத்தாலி  மற்றும் ஐர்லாந்து மோதின இதில்  1-0 என்ற  கோல்  கணக்கில்  ஐர்லாந்து வெற்றி பெற்று ரவுண்ட்  16க்கு  தகுதியானது 

 

ஏற்கனவே இத்தாலி ,ஜெர்மன் ,பிரான்ஸ் ,இங்கிலாந்து ,வாலஸ் ,சுவிஸ்சர்லாண்ட் , குரேஷியா,ஸ்பெய்ன் ,போலந்து ,நோர்த்.ஐர்லாந்து,ஸ்லோவாகிய.. போன்ற  நாடுகள்  ரவுண்ட் 16 க்கு தகுதி பெற்றன .

 

SOURCE : newtamiltimes.com

 

ஜெர்மனி மற்றும் போலந்து அணி போட்டியில் டிராவில் முடிந்தது.

பிரான்ஸ் : நேற்று இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜெர்மனி  போலந்து இரு அணியும்  கோல் இல்லாமல்  போட்டி டிராவில் முடிவு அடைந்தது...

ஐசிசி சார்பில் நடத்தப்படும் டி20 உலகக் கோப்பை போட்டி, அடுத்ததாக 2020-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ளது. இந்நிலையில் 2018-ல் ஒரு டி20 உலகக் கோப்பை போட்டியை நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளது.

இந்த வருடம் இந்தியாவில் டி20 உலகக் கோப்பை நடைபெற்றது. அடுத்தப் போட்டி, 2020-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ள நிலையில் அதற்கு முன்பு இன்னொரு போட்டியை நடத்த ஐசிசி முடிவெடுத்துள்ளது. இனிமேல் ஒவ்வொரு 2 ஆண்டுகளின் இடைவெளியில் டி20 உலகக் கோப்பை போட்டியை நடத்தவும் ஆலோசித்து வருகிறது. இதுதொடர்பாக போட்டியை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது ஐசிசி.

2018 டி20 உலகக் கோப்பை போட்டியை தென் ஆப்பிரிக்காவில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல சூப்பர் 10 பிரிவில் மேலும் இரு அசோசியேட் அணிகளைச் சேர்க்கவும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…