JoomlaLock.com All4Share.net

Background Video

Super User

Super User

Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

பாலியல் தொழிலுக்கு மாணவிகளை அழைத்ததாக எழுந்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நிர்மலா தேவியிடம் 4வது நாளாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்னர். அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி மாணவிகளைத் தவறான வழியில் செல்வதற்காக மூளைச்சலவை செய்யும் வகையில் பேராசிரியை நிர்மலாதேவி பேசிய ஆடியோ வெளியானது. Image result for luring professor Nirmaladevi photos images

மாணவர்கள், மகளிர் அமைப்பினரின் போராட்டத்தை அடுத்து கடந்த 17ஆம் தேதி நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்த நிர்மலா தேவியை ஐந்து நாட்கள் கஸ்டடியில் எடுத்து விருதுநகரில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

முதல்நாள் விசாரணையின்போது காமராஜர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஆராய்ச்சி மாணவர் மற்றும் துணை பேராசிரியர் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் தான் மாணவிகளிடம் பேசியதாக நிர்மலா தேவி தெரிவித்தார். நிர்மலா தேவி கூறிய இருவரும் தலைமறைவாகிவிட்டனர்.

இந்நிலையில் பேராசிரியர் முருகன் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ டிப்பார்ட்மென்ட்டில் வருகைப் பதிவில் கையெழுத்து போடும்போது அவரைக் காவல்துறையினர் பிடித்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர் .

நிர்மலாதேவியை சிபிசிஐடி காவலில் எடுப்பதற்கு முன்னர் அவரால் பாலியல் அழைப்புக்குள்ளான 4 மாணவிகளிடமும் சிபிசிஐடி போலீசார் தேவாங்கர் கல்லூரியில் ரகசியமாக விசாரணை நடத்தினர். அப்போது மாணவிகள் 4 பேரும் நிர்மலாதேவியின் வற்புறுத்தல் பற்றி பரபரப்பு தகவல்களை கூறியுள்ளனர். இதனை அடிப்படையாக வைத்தே போலீஸ் காவலில் நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நிர்மலாதேவியின் பின்னணியில் இருப்பவர்கள் யார் யார் என்று கண்டுபிடிக்க சிபிசிஐடி அதிகாரிகள் தோண்டி துருவி வருகின்றனர். முன்னதாக நேற்று அருப்புக்கோட்டையின் புறநகர் பகுதியான ஆத்திப்பட்டியில் நிர்மலாதேவி வீட்டிற்கு அழைத்து சென்ற சிபிசிஐடி அதிகாரிகள் அவர் முன்னிலையில் சோதனை மேற்கொண்டனர்.

Image result for luring professor Nirmaladevi photos images

வீட்டிற்குள் இருந்து முக்கிய ஆவணங்கள், கம்ப்யூட்டர், சிபியூ மற்றும் பென் டிரைவ் போன்றவற்றைக் கைப்பற்றியுள்ளனர். நிர்மலாதேவியின் காரிலும் சிபிசிஐடி போலீசார் சோதனை போட்டனர். அப்போது ரகசிய டைரி ஒன்றும் சிக்கியது. அதில் நிர்மலாதேவியின் தொடர்பில் இருந்த அதிகாரிகள் பெயர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. டெலிபோன் எண்கள் மற்றும் பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இந்த சோதனை வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது.

இந்தச் சோதனையின்போது ஆத்திபட்டி கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் உடன் இருந்தார். 5 மணி நேரத்திற்கு மேலாக, சோதனை நடைபெற்ற பின்னர் வீட்டினை பூட்டி சீல் வைத்தது சிபிசிஐடி. இதனையடுத்து மருத்துவ பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு நிர்மலா தேவி அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு ரத்த அழுத்தம், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறித்து பரிசோதனை செய்யப்பட்டது.

மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததன் பின்னணியில் இருப்பவர்கள் யார் யார் என்றும், கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். நிர்மலா தேவியை அவரது சகோதரர் ரவி சிபிசிஐடி அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.

நிர்மலா தேவியுடன் புத்தாக்க பயிற்சியில் இருந்த பெண் பேராசிரியையை, மேலும் கரூரை சேர்ந்த ரயில்வே துறை பணியாளர்கள், நிர்மலா தேவிக்கு தெரிந்த நபர்கள் என அனைவரையும் வரவழைத்து விசாரித்தனர்.

நிர்மலாதேவியுடன் தொடர்பில் இருந்த பலரும் இப்போது விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்பதால் பீதிக்கு ஆளாகியுள்ளனர். ரகசிய டைரியில் உள்ள பலரையும் விசாரணைக்கு அழைக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.


திங்கட்கிழமை, 23 ஏப்ரல் 2018 00:00

ரஜினி திடீர் அமெரிக்க பயணம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் ஜூன் மாதம் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருடைய அரசியல் கட்சி குறித்த அறிவிப்பும் 'காலா' படத்தை ஒட்டியே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் இன்றிரவு ரஜினிகாந்த் அமெரிக்கா செல்லவிருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. சமீபகாலமாகவே ரஜினிகாந்த் அமெரிக்கா சென்று உடல்பரிசோதனை செய்து கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் உடல் பரிசோதனை செய்ய அவர் அமெரிக்காவுக்கு செல்வதாகவும், அங்கு பத்து நாட்கள் தங்கியிருந்து முழு உடல் பரிசோதனை செய்த பின்னர் அவர் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
 
சமீபத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளின் நிர்வாகிகள் பட்டியல் வெளியாகிய நிலையில் அந்த நிர்வாகிகளை ரஜினிகாந்த் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஐதராபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் 20-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அம்பதி ராயுடு (79), சுரேஷ் ரெய்னா (54) ஆகியோரின் ஆட்டத்தால் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களம் இறங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க பந்து வீச்சாளர் தீபக் சாஹல் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தி ரிக்கி புய் (0), மணிஷ் பாண்டே (0), தீப் ஹூடா (1) ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றி அதிர்ச்சி அளித்தார். இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 22 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்தது.

4-வது விக்கெட்டுக்கு கேன் வில்லியம்சன் உடன் ஷாகிப் அல் ஹசன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் ஸ்கோர் 71 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. ஷாகிப் அல் ஹசன் 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து கேன் வில்லியம்சன் உடன் யூசுப் பதான் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஆட்டத்தின் போக்கை மாற்றியது. நேரம் ஆகஆக கேன் வில்லியம்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

35 பந்தில் அரைசதம் அடித்த கேன் வில்லியம்சன் அதன்பின் வாணவேடிக்கை நிகழ்த்தினார். கடைசி 18 பந்தில் (3 ஓவர்) சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 42 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரை வெயின் பிராவோ வீசினார். இந்த ஓவரில் பிராவோ 9 ரன்கள் விட்டுக்கொடுத்து கேன் வில்லியம்சன் விக்கெட்டை வீழ்த்தினார். வில்லியம்சன் 51 பந்தில் 5 பவுண்டரி, 5 சிக்சருடன் 84 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். வில்லியம்சன் அவுட்டால் ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் பக்கம் திரும்பியது.

கடைசி இரண்டு ஓவரில் 33 ரன்கள் தேவைப்பட்டது, யூசுப் பதான் உடன் சகா ஜோடி சேர்ந்தார். 19-வது ஓவரை சர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் யூசுப் பதான் சிக்ஸ் அடித்தார். ஆனால் 4-வது பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஷித் கான் கடைசி பந்தில் சிக்ஸ் தூக்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 14 ரன்கள் கிடைத்தது.

இதனால் கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது. பிராவோ கடைசி ஓவரை வீசினார். முதல் மூன்று பந்தில் மூன்று ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 4-வது பந்தை ரஷித் கான் சிக்சருக்கு தூக்கினார். இதனால் கடைசி இரண்டு பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்டது. 5-வது பந்தை ரஷித் கான் பவுண்டரிக்கு விரட்டினார். கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் பிராவோ ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் 4 ரன்னில் வெற்றி பெற்றது.

ஞாயிற்றுக்கிழமை, 22 ஏப்ரல் 2018 00:00

ஐபிஎல் : மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்

மும்பைக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்தியாவில், 11வது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. நேற்று, ஜெய்ப்பூரில் நடந்த 21வது லீக் போட்டியில் ராஜஸ்தான், 'நடப்பு சாம்பியன்' மும்பை அணிகள் மோதின.

'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த மும்பை அணிக்கு எவின் லீவிஸ் (0) ஏமாற்றினார். ஸ்ரேயாஸ் கோபால் பந்தை சிக்சருக்கு அனுப்பிய சூர்யகுமார் யாதவ், அரைசதமடித்தார். மறுமுனையில் அசத்திய இஷான் கிஷான், 35 பந்தில் அரைசதத்தை பதிவு செய்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 129 ரன்கள் சேர்த்திருந்த போது இஷான் கிஷான் (58) அவுட்டானார்.

பொறுப்பாக ஆடிய சூர்யகுமார் (72) நம்பிக்கை தந்தார். கேப்டன் ரோகித் சர்மா (0), 'ரன்-அவுட்' ஆனார். ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய 19வது ஓவரில் குர்னல் பாண்ட்யா (7), ஹர்திக் பாண்ட்யா (4), மெக்லீனகன் (0) அவுட்டாகினர். மும்பை அணி, 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு, 167 ரன்கள் எடுத்தது. போலார்டு (21) அவுட்டாகாமல் இருந்தார்.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணிக்கு ராகுல் திரிபாதி (9) ஏமாற்றினார். மெக்லீனகன் 'வேகத்தில்' கேப்டன் ரகானே (14) வெளியேறினார். பின், இணைந்த சாம்சன், ஸ்டோக்ஸ் ஜோடி பொறுப்புடன் விளையாடியது. ஹர்திக் பாண்ட்யா பந்தில் ஸ்டோக்ஸ் (40) போல்டானார். சாம்சன் அரை சதம் கடந்தார். பும்ரா 'வேகத்தில்' சாம்சன் (52), பட்லர் (6) அடுத்தடுத்து சிக்கினர். கிளாசன் டக்-அவுட்டானார்.

இருப்பினும், கவுதம் அதிரடி காட்டினார். இவர் ஒரு சிக்சர் விளாச, ராஜஸ்தான் அணி 19.4 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது, கவுதம் (33 ரன், 11 பந்து), உனத்கட் (௦) அவுட்டாகாமல் இருந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், நேற்று இரண்டாவது நாளாக நீடித்த கடல் சீற்றத்தால், மீனவ கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.மத்திய கனிமவளத் துறை தேசிய கடல் ஆய்வு மையம், 'தென்னிந்திய கடல் பகுதியில், சீற்றம் அதிகமாக இருக்கும்' என, எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனால், மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. கன்னியாகுமரி மாவட்ட கடலோர கிராமங்களான குளச்சல், மண்டைக்காடு, குறும்பனை உள்ளிட்ட பகுதிகளில், பெரிய கடல் அலைகள் எழுந்தன. குளச்சலில், இதை படம் எடுக்க சென்ற, நான்கு பேரை கடல் அலை இழுத்து சென்றது.

மீனவர்கள், அவர்களை காப்பாற்றினர். நீரோடி உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களில், பெரிய அலைகளால், ஊருக்குள் தண்ணீர் புகுந்து, வீடுகள் சேதம் அடைந்தன. ராமன்துறையில் ரோடு அரிப்பு ஏற்பட்டு, போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.கடல் நீர் புகுந்த கிராம மக்கள், திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

100 பேர் முகாம்களில் தங்கியுள்ளனர். சில இடங்களில், கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகுகளை தண்ணீர் இழுத்து சென்றது. கன்னியாகுமரியில், சுற்றுலா பயணியர், கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

விவேகானந்தர் பாறைக்கு, படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட இடங்களை, கலெக்டர் பிரசாந்த் வடநேரே பார்வையிட்டார். 

பக்கம் 1 / 1975
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…