JoomlaLock.com All4Share.net

Background Video

சினிமா

நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் திடீர் திருப்பம் - குடி போதையில் குளியல் தொட்டியில் மரணம் -அவிழ்கப்படாதா மர்ம முடிச்சுகள்

பிரபல நடிகை, ஸ்ரீதேவியின் மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 'அவர் மாரடைப்பால் உயிரிழக்கவில்லை; குளியல் தொட்டியில் மூழ்கி இறந்துள்ளார். இறக்கும்போது குடிபோதையில் இருந்துள்ளார்' என, பிரேத பரிசோதனையில், 'பகீர்' தகவல் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதால், ஸ்ரீதேவியின் கணவர் மற்றும் உறவினர்களிடம், துபாய் போலீசார் விசாரித்து வருகின்றனர். Image result for actress sridevi's death photos images

சட்ட நடைமுறைகள் முடிந்து, உடல் ஒப்படைக்கப்பட்டு, இன்று மும்பையில் இறுதிச் சடங்கு நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த, 50 ஆண்டுகளாக, தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து வந்த, பிரபல நடிகை, ஸ்ரீதேவி, 54, வளைகுடா நாடான, ஐக்கிய அரசு எமிரேட்ஸின் துபாய் நகருக்கு திருமணத்துக்கு சென்றபோது, உயிரிழந்தார். மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது; இது, அவரது ரசிகர்கள், திரையுலக நண்பர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஸ்ரீதேவியின் உடல், நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அதன் முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில், திடீர் திருப்பமாக, பல அதிர்ச்சிகரமான தகவல்கள் இருந்தன. பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நடிகை ஸ்ரீதேவி, மாரடைப்பால் உயிரிழக்கவில்லை.

அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையின், குளியறையில் இருந்த குளியல் தொட்டியில் மூழ்கியே உயிரிழந்துள்ளார். இறந்தபோது, சுயநினைவு இல்லாமல் இருந்துள்ளார். மேலும், அளவுக்கு அதிகமான குடிபோதையில் இருந்துள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தத் தகவல், அவரது குடும்பத்தார், ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து, துபாய் போலீசார் கூறியதாவது: பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் மாரடைப்பில் இறக்கவில்லை; குளியல் தொட்டியில் மூழ்கி தான் உயிரிழந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. தற்செயலாக அவர் குளியல் தொட்டியில் மூழ்கி இறந்ததால், அது ஒரு விபத்தாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது. Image result for actress sridevi's death photos images

இருப்பினும், அவர் மரணமடைந்த நேரத்தில், அவருடன் யார் யார் இருந்தனர் என்பது உள்ளிட்டவை குறித்து சாரிக்கிறோம். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையில், மருத்துவமனை நடவடிக்கைகள் முடிந்து, 'எம்பாமிங்' எனப்படும், உடல் அழுகாமல் இருப்பதற்கான, பதப்படுத்தும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வழக்கு, அரசு சட்டத் துறைக்குமாற்றப்பட்டுள்ளதாக, துபாய் போலீஸ் தெரிவித்துள்ளது. சட்ட நடைமுறைகள் முடிந்து, அவரது உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, ஸ்ரீதேவியின் உடல், இன்று மும்பை எடுத்து வரப்பட்டு, இறுதிச் சடங்குகள் நடத்தப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ரீதேவியின் மரணத்தில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் திருப்பம், அவரது ரசிகர்களிடையே, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. 'ஸ்ரீதேவி மாரடைப்பில் இறந்ததாக, முதலில் தகவலை கசிய விட்டது யார்; எங்கு மது அருந்தினார்; அப்போது, அவருடன்  யார் யார் இருந்தனர்' என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதனால், இந்த மரணத்தில், பல மர்ம முடிச்சுகள் இருப்பதாக, அவரது ரசிகர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

Read 854 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…