JoomlaLock.com All4Share.net

Background Video

சினிமா

'காலா' டீஸர் வெளியீடு : நெல்லை பாஷையில் கலக்கும் ரஜினி

'கபாலி' படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்திருக்கும் படம் 'காலா' படத்தின் டீசர் வெளியானது. Image result for kaala teaser released photos images

இந்தப் படத்தை தனுஷ், அவரது வொண்டர் பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். ஒரு மலேசிய கேங்க்ஸ்டராக 'கபாலி' படத்தில் மாஸ் காட்டிய ரஜினிகாந்த், இந்தப் படத்தில் மும்பையில் வாழும் நெல்லை தமிழராக நடித்துள்ளார்.

ஃபர்ஸ்ட் லுக் வெளியான நாளிலிருந்தே படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. சந்தோஷ் நாராயணன் இசையில் முரளியின் ஒளிப்பதிவில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஈஸ்வரி ராவ் நடித்துள்ளார்.

மேலும், சமுத்திரக்கனி, ஹூமா குரேஷி, நானா படேகர், திலீபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மார்ச் 1ம் தேதி அன்று டீசர் வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில்,  ஜெயேந்திர சரஸ்வதி அவர்களின் மறைவியையடுத்து டீசர் 2ம் தேதி 10.00 மணிக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தெரிவித்திருந்தார்.

ஆனால், இன்று 12 மணிக்கே படத்தின் டீசர் டியூபில் வெளியாகி உள்ளது. வெளியான சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர். ஏப்ரல் 27ம் தேதி 'காலா' படம் திரைக்கு வரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Read 120 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…