JoomlaLock.com All4Share.net

Background Video

சினிமா

பழம்பெரும் தயாரிப்பாளர் முக்தா.சீனிவாசன் காலமானார்
சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கி, தயாரித்த பழம்பெரும் இயக்குனர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் இன்று காலமானார். அவருக்கு வயது 88.
 
முக்தா சீனிவாசன் அவர்கள் இன்று உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். மறைந்த பழம்பெரும் இயக்குனர் முக்தா சீனிவாசன் காலமான செய்தி அறிந்து கோலிவுட் திரையுலகினர்  அதிர்ச்சி அடைந்து அவரது ஆன்மா சாந்தியடைய இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 
எஸ்.எஸ்.ஆர் நடித்த 'முதலாளி' படத்தின் மூலம் இயக்குனரான முக்தா சீனிவாசன், அதன் பின்னர் இதயத்தில் நீ, பூஜைக்கு வந்த மலர், தேன்மழை, பொம்மலாட்டம், நிறைகுடம், அருணோதயம் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். ஜெயலலிதாவின் 100வது படமான 'சூரியகாந்தி' படத்தை இயக்கியவரும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கிய சூப்பர் ஹிட் படமான 'நாயகன்' படத்தை தயாரித்தவரும் இவர்தான். இவர் கடைசியாக 'சிவப்பு என்ற படத்தை தயாரித்தார்.
Read 70 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…