JoomlaLock.com All4Share.net

Background Video

சினிமா

குப்புற விழுந்தது ரஜினியின் 'காலா' : ரூபாய் 40 கோடி நஷ்டம்
ரஜினிகாந்த்  நடித்த காலா திரைப்படத்தால் வினியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை திருப்பி தர தனுஷ் சம்மதித்து விட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
வழக்கமாக ரஜினி படம் வெளியாகிறது எனில், முன்பதிவு தொடங்கியவுடனேயே ஒரு வாரத்திற்கு டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு விடும். ஆனால், சென்னையில் சத்யம் உள்ளிட்ட முக்கிய தியேட்டர்களிலேயே வார இறுதிநாட்களான சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் டிக்கெட் இன்னும் புக் ஆகாமல் காலியாக கிடக்கிறது. மிக சொற்பமான டிக்கெட்டுகள் மட்டுமே புக் செய்யப்பட்டிருக்கிறதாம். மற்ற மாவட்டங்களிலும் இதே நிலைதான். Image result for kaala film stills posters
 
குறிப்பாக ரஜினி படம் வெளியானால் முதல் நாள் வசூலே பல கோடிகளை தொட்டு விடும். ஆனால், அந்த மேஜிக் ‘காலா’வில் நடக்கவில்லை எனத்தெரிகிறது.  இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது.
 
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான் காலா படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. படம் வெளியாக 3வது நாளிலேயே பல தியேட்டர்கள் காத்து வாங்கியது. எனவே, இப்படம் ஒரு தோல்விப்படம் என சிலரும், இல்லை இது வெற்றிப்படமே என சிலரும் கருத்து கூறி வந்தனர்.
 
இப்படத்தை தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் டிஸ்ட்ரிபியூஷன் முறையில்தான் வினியோகஸ்தர்களிடம் கொடுத்துள்ளார். தமிழ்நாடு தியேட்டரிக்கல் உரிமை மட்டும் ரூ.62 கோடிக்கு விற்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த வெற்றி பெறாததால், படத்தை வாங்கியவர்கள், நஷ்டத்தை ஏற்கும்படி தனுஷிடம் வலியுறுத்தியுள்ளனர். எனவே, ரூ.40 கோடி நஷ்டத்தை அவர் ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. 
 
இதன் மூலம் காலா ஒரு தோல்விப்படம் என்பது உறுதியாகியுள்ளது.
 
இந்நிலையில், ரூ.40 கோடி நஷ்டத்திற்கு தயாரிப்பாளர் தானு பொறுப்பேற்றுக் கொண்டதாகவும், அதற்கு பிரதிபலனாக அவரின் தயாரிப்பில் நடிகர் தனுஷ் 3 படங்களில் நடித்துக்கொடுக்க வேண்டும் என டீல் பேசப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
 
எனவே, காலா படத்தை வாங்கி நஷ்டத்தை சந்தித்த வினியோகஸ்தர்களுக்கு தானு தரப்பில் பணம் செட்டில் செய்யப்படும் எனத் தெரிகிறது. வெற்றிப்பட தயாரிப்பாளரான தானுதான், பா. ரஞ்சித் - ரஜினி காம்பினேஷனில் உருவான கபாலி படத்தை தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
Read 133 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…