மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை படமாகிறது.
தமிழக முதல்வர்களில் அதிகம் கவரப் பெற்றவர் ஜெயலலிதா. ஒரு மாநில முதல்வராக இருந்தாலும், தேசிய அளவில் அறியப்பட்ட ஒரு தலைவியாக இருந்தார். ஒரு அரசியல்வாதியாக, முதல்வராக மட்டுமல்லாமல் பெண்ணாக பல பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர்.
சினிமாவில் நடித்து, பிறகு கட்சிப்பணி ஆற்றி ஆட்சிக்கு வந்து பல சாதனைகளை செய்தார். அவருடைய வாழ்க்கை வரலாறு இப்போது திரைப்படமாக எடுக்கப்பட உள்ளது.
என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்த விப்ரி மீடியா நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது. ஏ.எல்.விஜய் இயக்குகிறார். இப்படம் ஜெயலலிதாவின் சாதனைகளை போற்றும் வகையில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
ஜெயலலிதாவின் கதாப்பாத்திரத்திற்கு பொறுத்தமான நடிகை யார் என இன்னும் முடிவு செய்யப்படவில்லை. சமீபத்தில் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான நடிகையர் திலகம் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ், பாலிவுட் நடிகை வித்யா பாலன், அனுஷ்கா ஷெட்டி மற்றும் சில கதாநாயகிகள் பரிசீலனை பட்டியலில் உள்ளனர்.
இத்திரைப்படத்தின் ஃபர்ஸ் லுக் போஸ்டரை, ஜெயலலிதாவின் பிறந்தநாளான செப்டம்பர் 24ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் தயாராகிறது.