Print this page

சினிமா

நயன்தாராவின் புதிய படத்தின் பெயர் ‘டோரா’

2015 நயன்தாராவுக்கு அட்டகாசமான வருடமாக அமைந்துவிட்டது. தனி ஒருவன், மாயா, நானும் ரெளடிதான் என ஹாட்ரிக் அடித்தார்.

இதனால் 2016-ல் நயன்தாரா இன்னும் கவனமாக உள்ளார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளார்.

இயக்குநர் சற்குணம் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் படத்துக்கு டோரா என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை தாஸ் இயக்குகிறார். இசை - விவேக் - மெர்வின்.

குழந்தைகளுக்கு அதிகம் பிடித்த கார்ட்டூன் பாத்திரம் ‘ டோரா’. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனவரும் கண்டு களிக்கும் விதமாக இப்படத்தின் கதை அமையவிருக்கிறது. குழந்தைகளை கவரும் விதமாக இந்த படத்திற்கு ‘டோரா’ என்று வைக்கப்பட்டிருக்கிறது.

Read 526 times Last modified on செவ்வாய்க்கிழமை, 05 ஜூலை 2016 22:07
Share this article

About author

Super User
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…