JoomlaLock.com All4Share.net

Background Video

சினிமா

வட இந்தியாவில் 1000 தியேட்டர்களில் ‘கபாலி’ ரிலீஸ்

லிங்கா படத்தைத் தொடர்ந்து ரஜினி நடித்துள்ள படம் கபாலி. பா. இரஞ்சித் இயக்கத்தில், கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.

கபாலி படத்தின் டீசர் முதலில் வெளியாகி, ரசிகர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றது. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவான இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.

பிறகு படத்தின் புதிய பாடல் டீசரும் வெளியிடப்பட்டது. நெருப்புடா பாடலின் டீசர். ரஜினியின் வழக்கமான ஸ்டைலில் காட்சிகள் இருந்ததைக் கண்டு ரசிகர்கள் பரவசமடைந்தார்கள்.

இந்நிலையில் கபாலி படத்தின் வடஇந்தியத் திரையரங்கு உரிமையைப் புகழ்பெற்ற ஃபாக்ஸ் ஸ்டார் இந்தியா நிறுவனம் வாங்கியுள்ளது. ஹிந்திப் பதிப்பை ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் வெளியிடுவதால் படம் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல கபாலியின் ஹிந்திப் படத் தொலைக்காட்சி உரிமம், ஸ்டார் டிவிக்கு விற்கப்பட்டுள்ளது.

ஃபாக்ஸ் ஸ்டார் இந்தியா நிறுவனம், வட இந்தியாவில் 1000 திரையரங்குகளில் திரையிட உள்ளது. ஜூலை 22-ம் தேதி படம் வெளிவரும் என்று நம்பகத்தகுந்த தகவல்கள் தெரிவித்துள்ளதால் அன்றைய தினம் மட்டும் வட இந்தியாவிலேயே படம் ஒரு பரபரப்பை உண்டு பண்ணும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Read 579 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…