JoomlaLock.com All4Share.net

Background Video

சினிமா

ஜோதிகாவின் அடுத்த படம் இன்று தொடக்கம்

'36 வயதினிலே' படத்திற்குப் பிறகு ஜோதிகா நடிக்கும் படம் இன்று ஆரம்பமாகியுள்ளது. இது பற்றி சூர்யா அவருடைய டிவிட்டரில் தெரிவித்துள்ளார். "சிறந்த நடிகர்கள், கலைஞர்களுடன் ஜோ அவருடைய அடுத்த படத்தை ஆரம்பித்துள்ளார். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்...எப்போதும் போல் உங்களது வாழ்த்துகள் வேண்டும், உற்சாகமான கணவன்" என மகிழ்ச்சி பொங்க டிவீட்டியுள்ளார்.சூர்யாவைத் திருமணம் செய்து கொண்ட பின் சினிமாவில் நடிப்பதை நிறுத்தியிருந்தார் ஜோதிகா. இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பின் அவர்கள் வளர்ந்ததும் மீண்டும் சினிமாவில் நடிக்க விரும்பி நாயகிக்கு முக்கியத்தும் வாய்ந்த '36 வயதினிலே' படம் மூலம் கடந்த வருடம் மீண்டும் நடிக்க வந்தார். அந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே தொடர்ந்து நடிக்க முடிவெடுத்தார். 'குற்றம் கடிதல்' படத்தை இயக்கிய பிரம்மா சொன்ன கதை அவருக்கு மிகவும் பிடிக்கவே அந்தப் படத்தில் நடிக்க முடிவு செய்தார். அதன் படப்பிடித்தான் இன்று ஆரம்பமாகியுள்ளது. ஆனாலும், தேசிய விருது பட இயக்குனர் பெயரைக் கூட சூர்யா தன்னுடைய டிவீட்டில் குறிப்பிடாதது ஏன் என்று தெரியவில்லை.

Read 153 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…