JoomlaLock.com All4Share.net

Background Video

சினிமா

'கபாலி படம் இணையதளத்தில்' ??

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித்தின் இயக்கத்தில், தாணுவின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'கபாலி. ரஜினியுடன் கலையரசன், தினேஷ், தன்ஷிகா, ராதிகா ஆப்தே, ரித்விகா, கிஷோர், ஜான்விஜய் போன்றவர்களுடன் ஹாலிவுட் நடிகர் வின்ஸ்டன் சாவோவும் நடித்துள்ளனர். வருகிற ஜூலை 22ம் தேதி கபாலி படம் உலகம் முழுக்க பிரமாண்டமாய் ரிலீஸாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலாய் என நான்கு மொழிகளிலும் கபாலி படம் ரிலீஸாக இருக்கிறது. கபாலி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து எங்கு பார்த்தாலும் கபாலி மயமாகத்தான் இருக்கிறது. கீ செயின் தொடங்கி விமானம் வரை கபாலி விளம்பரம் தான் றெக்க கட்டி பறந்து கொண்டிருக்கிறது.இதனிடையே கபாலி படம் திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியாவதை தடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் தாணு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார், வழக்கில் முறையற்ற 200க்கும் மேற்பட்ட இணையதளங்களை முடக்க சொல்லி கோர்ட் உத்தரவிட்டது.இந்நிலையில் திருட்டுத்தனமாக இணையதளங்களில் படங்களை வெளியிடும் இணையதளம் ஒன்று கபாலி படத்தின் 30 நிமிட காட்சிகளை நேற்று இரவு வெளியிட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியானதும் சம்பந்தப்பட்ட அந்த இணையதளம் முடக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், அந்த இணையதளம் தங்களின் இணையதள முகவரியை மாற்றி இனி இந்த முகவரியில் தங்களின் இணையதளத்தை காணலாம் என அறிவித்திருக்கிறது. படம் வெளியான ஒருவாரம், இரண்டுநாள், ஒருநாள், ஒருநாள் முன்னதாக என்று இணையதளங்களில் படங்கள் வெளியான சூழ்நிலையில் இப்போது ஒருவாரத்திற்கு முன்னதாகவே கபாலி படம் வெளியாகியிருப்பது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Read 182 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…