JoomlaLock.com All4Share.net

Background Video

சினிமா

ஹூமா குரேஷி-ன் ஆசை

பாலிவுட் ஹிட் படமான 'கேங்க்ஸ் ஆப் வாசப்பூர்' நாயகி ஹூமா குரேஷி.. முதன்முதலாக மலையாளத்தில் 'ஒயிட்' என்கிற படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் தென்னிந்திய சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். உதய் ஆனந்தன் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் நடுத்தர வயதான லண்டன் தொழிலதிபரான மம்முட்டியை காதலிக்கும் இளம் வயது பெண்ணாக ரோஷிணி என்கிற கேரக்டரில் நடித்துள்ளார் ஹூமா குரேஷி.. வரும் ஜூலை-29ஆம் தேதி இந்தப்படம் ரிலீஸாக இருக்கிறது.மம்முட்டிக்கு ஜோடியாக நடித்துள்ள இவர், இவரைத்தேடி விஜய், சூர்யா படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை சில காரணங்களால் மறுத்துவிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அதேசமயம் தந்தையுடன் ஜோடியாக நடித்த இவருக்கு, மகனுடனும் ஜோடியாக நடிக்க வேண்டும் என்பது அவரது பத்து முக்கியமான கனவுகளில் ஒன்றாம். ஆம் துல்கர் சல்மான் இவரது பேவரைட் ஹீரோவாம். துல்கர் நடித்த படங்களை ஒன்றுவிடாமல் பார்த்து வரும் ஹுமா, அவரது இயல்பான, ஸ்டைலிஷான நடிப்பு தன்னை மயக்கி விடுகிறது என்று ஒரு பேட்டியிலேயே கூறியுள்ளார். அப்பாவும் மகனும் ஒரே காலகட்டத்தில் ஹீரோவாக வலம் வரும்போது எதுவும் சாத்தியம் தானே.

Read 202 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…