JoomlaLock.com All4Share.net

Background Video

சினிமா

ஸ்வேதா பாசுவின் புதிய காதலர்

தமிழில் 'ரா ரா', 'சந்தமாமா' படங்களில் நடித்தவர் ஸ்வேதா பாசு. இந்திப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் அதன் பிறகு தெலுங்கு படங்களில் நடித்தார். வாய்ப்பு இல்லாமல் சினிமாவை விட்டு விலகி இருந்தார். கடந்த ஆண்டு ஐதராபாத்தில் ஒரு நட்சத்திர ஓட்டலில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு பரபரப்பானர். "எனது வறுமையால் இந்த தொழிலுக்கு வர நேர்ந்தது" என்ற அவர் அளித்த பேட்டியால் நெகிழ்ந்த பிரபல இந்திப் பட இயக்குனர் அனுராக் காஷ்யப் தனது படத்தில் அவரை நடிக்க வைக்க இருப்பதாக கூறினார்.விபச்சார வழக்கிலிருந்து விடுபட்டதும் இது தொடர்பாக அனுஷராக் காஷ்யப்பை சந்தித்தார் ஸ்வேதா. அப்போது அவரிடம் உதவி இயக்குனராக இருந்த ரோகித் மிட்டல் என்பவருடன் ஸ்வேதாவிற்கு பழக்கம் ஏற்பட்டது. தற்போது அதுவே காதலாகிவிட்டதாக கூறப்படுகிறது. இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்கள் தற்போது இணையதளத்தில் வெளிவந்துள்ளது. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. ஸ்வேதா தற்போது தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.

Read 207 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…