JoomlaLock.com All4Share.net

Background Video

சினிமா

“குடும்பத்துடன் வெளிநாடு சென்றார் 'தல அஜித்'”

தல அஜித் 'வேதாளம்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த பின்னர் அறுவை சிகிச்சை செய்து கடந்த சில மாதங்கள் ஓய்வு எடுத்து வந்த நிலையில் தற்போது அவர் வெளிநாட்டுக்கு குடும்பத்துடன் கோடை விடுமுறைக்காக சென்றுள்ளார். இன்று அவர் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு சென்றுள்ளார்.

அஜித்தின் வெளிநாட்டு திட்டம் முன்பே போடப்பட்டிருந்தாலும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதற்காகவே தனது பயணத்தை அவர் ஒத்தி வைத்ததாகவும், தற்போது தேர்தல் முடிவடைந்துள்ளதால் வெளிநாட்டுக்கு சென்றுள்ளதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன

அஜித் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பியவுடன் அவரது 57வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அதுவரை அந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து வரும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அஜித் சென்னை விமான நிலையத்திற்கு குடும்பத்துடன் வந்திறங்கும் வீடியோ காட்சி ஒன்று இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Read 415 times
Tagged under
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…